‘காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை,புரோக்கர்களும்,வாரிசுகளும் தான் ஆட்டிப்படைத்தனர்,’ என மத்திய உள்துறை அமைச்சர்அமித்ஷா பேசினார்.
ஹரியானாவில் வரும் அக்.,5ல் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ரிவாரியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
ஹரியானாவில், பா.ஜ., வெற்றி பெற்றால், விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) மற்றும் ஒரே பதவி-ஒரே ஓய்வூதியத்தின் மூன்றாம் பகுதி ஆகிய நன்மைகளை பெற்றுதருவோம். 40 ஆண்டுகளாக, ராணுவத்தினரின் கோரிக்கையான, ஒரே பதவி, திட்டத்தை காங்கிரசால் அமல்படுத்த இயலவில்லை.ஆனால், பிரதமர் மோடி, 2014 தேர்தல் பிரசாரத்தில் கூறியபடி, ஒரே பதவி-ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தினார். இத்திட்டத்தின் மூன்றாவது பகுதியையும் அமல்படுத்தி உள்ளோம்.
முந்தைய காங்கிரஸ் அரசு கொள்ளை, கமிஷன் மற்றும் ஊழலை மட்டுமே செய்தது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் புரோக்கர்களும், வாரிசுகளும் தான் ஆட்டிப்படைத்தனர். குறைந்த பட்ச ஆதார விலை என்றால் என்ன, காரிப் மற்றும் ரபி பயிர்கள் குறித்து காங்கிரஸ் கட்சியினருக்கு தெரியுமா? காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை அளிக்காமல் அக்கட்சி ஏமாற்றி விட்டது.
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |