ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத்தின் 2 மகன்களும் பிஹார் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் தேஜ்பிரதாப் மாநில சுகாதாரதுறை அமைச்சராகவும் பணியாற்றி வருகின்றனர். இருவரும் வருமானத்துக்கு பொருந்தாதவகையில் சொத்து சேர்த்திருப்பதாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது.
இந்தவிவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுஷில்குமார் மோடி, பாட்னாவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 2010-ம் ஆண்டில் அவுரங்காபாத் மாவட்டத்தில் ரூ.53.34 கோடி மதிப்பிலான நிலத்தை தேஜ்பிரதாப் வாங்கியுள்ளார். அந்தவிவரத்தை தேர்தல்பிரமாண பத்திரத்தில் அவர் குறிப்பிடவில்லை. ஒட்டுமொத்தமாக ரூ.15 கோடி மதிப்பிலான சொத்து விவரங்களை அவர் மறைத்துள்ளார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளோம்.
மாநில முதல்வர் நிதிஷ் குமார் தனது அமைச்சரவையில் இருந்து தேஜ்பிரதாபை நீக்கவேண்டும். ஆனால் அதற்கு அவருக்கு துணிவில்லை. அவர் தொடர்ந்து மவுனம்காத்து வருகிறார் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.