இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து. அவரைவைத்து அரசியல் செய்யக்கூடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கொடைக்கானலில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பேசுவதற்கு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால், முதல்வர் ஸ்டாலின் காலைமுதல் இரவு வரை சனாதனம் குறித்து பேசுகிறார். காரணம், முதல்வருக்கு பயம் .
சனாதனத்தை பற்றி தவறாக பேசிய ஆ.ராசா, உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்கப் படவில்லை. அவர்களை கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்தச் சென்ற என்னை கைதுசெய்யவில்லை என்பதற்காக காவல் துறை அதிகாரிகளை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றியுள்ளனர்
ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து. தமிழகத்தின் பெருமையை உலகரங்கில் உயர்த்தியவர். அவரை வைத்து அரசியல் செய்யக் கூடாது.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசைகச்சேரி நடந்த இடத்திலிருந்து 4 கி.மீ. தூரத்தில் எனது வீடு உள்ளது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் திட்டமிடுதல் சரியாகஇல்லை. அந்த வழியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். முதல்வர், பொதுமக்களுக்கு காவல்துறை சரியாக பாதுகாப்பு கொடுக்கவில்லை. ஏ.ஆர்.ரஹ்மானை சுற்றி நடந்த விஷயங்களைத்தான் பாஜக குற்றச்சாட்டாக வைத்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |