உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு பொதுவிடுமுறை நாட்கள் பட்டியலில் இருந்து 15 நாட்கள் நீக்கப்பட்டுள்ளன. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டது.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் பல்வேறுபுதிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இந்நிலையில், புதன்கிழமை யோகி ஆதித்யநாத் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு பொதுவிடுமுறை நாட்கள் பட்டியலில் இருந்து 15 நாட்கள் நீக்கப்படுவது என முடிவெடுக்கப்பட்டது. இது வரை அம்மாநில அரசு விடுமுறைப் பட்டியலில் 42 நாட்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 17 விடு முறை நாட்கள் தலைவர்களின் பிறந்த நாள், இறந்தநாளுக்காக அறிவிக்கப்பட்டவை. இந்த 17 நாட்களில் இருந்து 15 நாட்களை நீக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா, "அமைச்சரவை கூட்டத்தில் பெருந்தலைவர்கள் பிறந்தநாள் போன்றவற்றிற்காக அறிவிக்கப்பட விடு முறை நாட்களில் 15 நாட்கள் நீக்கப்பட்டுள்ளன. அன்றையதினம் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயக்கப்படும். எந்த தலைவருக்காக விடுமுறை அறிவிக்கப்பட்டதோ அவர் தொடர்பாக பாடம்புகட்டப்படும்" என்றார்.
முன்னதாக அம்பேத்கரின் 126-வது பிறந்தநாள் விழாவின்போது பேசிய யோகி ஆதித்யநாத், பெருந் தலைவர்களை நினைவுகூர விடுமுறை அளிக்கப்படுவதற்கு பதில் அன்றையதினம் வகுப்புகளில் சம்பந்தப்பட்ட தலைவர்கள் குறித்துபாடம் எடுக்கலாம்.
இதனால் அரசு ஆணைக்கு ஏற்ப 220 நாட்கள் பள்ளி, கல்லூரிகளை நடத்தலாம். தற்போது 120 நாட்கள் மட்டுமே கல்வி நிலையங்கள் இயங்குகின்றன. இதேநிலை தொடர்ந்தால் தலைவர்கள் பெயரில் அனைத்து நாட்களும் விடுமுறை நாட்களாகும்" என்று அவர் வருத்தம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.