உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

 சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 மணி நேரம் அதனுடைய உயிர்ச்சக்தி ஓட்டத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கும்.

 

ஒரு மனிதனின் உடல் நிலை நன்றாகவோ அல்லது நோய்வாய்ப்படுவதோ இந்த உயிர்ச்சக்தி ஓட்டத்தின் தன்மையைப் பொறுத்தே அமைகிறது.

நுரையீரல் : அதிகாலை 3-5 மணி

இந்நேரத்தில் எழுவது உடல் நலத்திற்கு நன்று. யோகம், தியானப் பயிற்சிகளுக்கு உகந்தது.

பெருங்குடல் : காலை 5-7

இந்நேரத்தில் எழுபவர்களுக்கு மலச்சிக்கல் இராது மலம் கழித்து குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

இரைப்பை ; காலை 7-9 

கண்டிப்பாக இந்நேரத்தில் காலை உணவு முடித்திருக்க வேண்டும்.

மண்ணீரல் : காலை 9-11 மணி

மிகச் சிறிய சிற்றுண்டியோ, பானங்களோ இந்நேரத்தில் அருந்தக் கூடாது.

இருதயம் : நண்பகல் 11-1 மணி

கடினமான வேலை ஏதும் செய்யாமல் தண்ணீர் மட்டும் குடித்து உடலை சாந்தப்படுத்திக் கொள்ளலாம்.

சிறுகுடல் : பிற்பகல் 1-3 மணி

மதிய உணவு முடித்துச் சில நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வு எடுக்கலாம். படுத்து உறங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

சிறுநீர்ப்பை : பிற்பகல் 3-5

பானங்களோ, தண்ணீரோ அருந்த உகந்த நேரம்.

சிறுநீரகம் : மாலை 5-7

வழக்கமான வேலையிலிருந்து விடுபட்டு இரவுக்கு முன்பாக வீடு வந்து சேர வேண்டும்.

இருதய மேலுறை : இரவு 7-9 மணி

இரவு உணவு முடித்திருக்க வேண்டும்.

மூன்று வெப்பமூட்டி(முக்குழிப்பாதை) : இரவு 9-11 மணி

ஓய்வு தரவேண்டிய நேரம். இதற்குப் பின் கண்விழித்திருக்கவோ, படிப்பதோ கூடாது.

பித்தப்பை : நடுநிசி 11-1 மணி

கண்டிப்பாக தூங்கிக் கொண்டு இருக்க வேண்டும்.

கல்லீரல் : அதிகாலை 1-3 மணி

ஆழ்ந்த நித்திரையில் இருக்க வேண்டும். விழித்திருந்தால் பார்வை சக்தி குறையும். உறக்கம் பாதிக்கும். உடல் அரிப்பு நமச்சல் அதிகரிக்கும்.

நன்றி : பானுகுமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...