''நாட்டில், ஜாதிய அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும்; நாட்டின் முன்னேற்றம், தேசபக்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்,'' என, உ.பி., முதல்வர் யோகி ஆதித்ய நாத் பேசினார்.
உத்தர பிரதேசத்தில், பா.ஜ.,வை சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். முதல்வராக பொறுப்பேற்றது முதல், மாநிலத்தில்பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து, மக்களின் நம்பிக்கையை பெற்று திகழும் இவர், ஜாதிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என, பேசியுள்ளார்;
லக்னோவில், இரண்டு நாட்கள் நடக்கும், பா.ஜ., மாநிலசெயற்குழு கூட்டத்தில், யோகி ஆதித்ய நாத் பேசியதாவது:நாட்டின் முன்னேற்றத்தில், பா.ஜ., அதிக கவனம் செலுத்திவருகிறது. ஜாதியை வைத்து.அரசியல் செய்யும் நடைமுறை, முற்றிலும் ஒழிக்கப்படும். ஜாதியஅரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, நாட்டின் முன்னேற்றம் மற்றும் தேசபக்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.