நடந்துமுடிந்த 2016 சட்டசபை தேர்தலில் திமுகவும் தோல்வியை சந்தித்தது, அதிமுகவும் தோல்வியை சந்தித்தது! மொத்தத்தில் கழகங்கள் தோல்வியை சந்தித்தன! பாஜகவின் எதிர்ப்பார்ப்பில் பாதி நடந்தது இனி மீதி நடக்கவேண்டும்!
அது எப்படி திமுகவும் அதிமுகவும் தோல்வியை சந்தித்தது? என்னும் கேள்வியை புருவத்தை உயர்த்திக்கொண்டு நீங்கள் கேட்பது புரிகிறது! வழக்கமாக எந்த கழகம் தேர்தலில் வென்று ஆட்சியமைத்தாலும், தோல்வியுற்ற கழகம் இரண்டு அல்லது மூன்று என்றுதான் விரல்விட்டு எண்ணும் வகையில் சட்டமன்ற உறுப்பினரை பெறும்! வெற்றிபெறும் கழகம் அமோக வெற்றியைத்தான் பெறும்! ஆனால் 2016 ல் அதிமுக 135 இடங்களில்தான் வெற்றிபெற்றது! வழக்கம்போல் 200 ஐ தாண்டவில்லை! எனவே அதிமுகவுக்கு இது வெற்றியல்ல தோல்வி!
ஐந்து ஆண்டுகள் அதிமுக ஆட்சிநடத்தியும் அதன் ஊழல்கள் வழக்கம்போல் திமுகவுக்கு சாதகமாக இருந்தும், திமுகவால் வெற்றிபெற முடியாதது திமுகவுக்கு மிகப்பெரிய தோல்வி! 2016 தேர்தலில் கழகங்கள் தோல்வியை சந்தித்துவிட்டன என்பதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும்!
இந்த தோல்வியால் மூளை குழம்பிப்போன திமுகவும் அதிமுகவும் தங்களுக்கு எதிராக தாங்களே போராடுகின்றன! தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தங்களின் அரசு மூலமாக செய்கின்றன! மதுவுக்கு எதிரான கழகங்களின் போராட்டமும் நடவடிக்கைகளும் கழகங்களின் மூளை குழம்பிப்போன நிலையைத்தான் காட்டுகின்றன!
1967 ல் திமுக ஆட்சியமைக்க உதவிய மூதறிஞர் ராஜாஜியும் பாஜகவின் முந்திய இயக்கமான பாரதிய ஜனசங்கமும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும்கூட எதையும் பொருட்படுத்தாமல் சாராயக்கடைகளை குதூகலமாக திறந்துவைத்து; சாராய வியாபாரிகளாக தனது கட்சியினரயே மாற்றி அவர்களிடமிருந்து கமிசன் வாங்கி சம்பாதித்த கருனாநிதியும், குடிப்பவர்களின் எண்ணிக்கையை கூட்டவேண்டும் என்பதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர்களின் கூட்டங்களை கூட்டி நடவடிக்கை எடுத்த ஜெயலலிதாவும், ”மக்கள் விரும்பவில்லை என்பதால் மதுக்கடைகளை குறைக்கவேண்டும்” ”குறைத்துக்கொள்கிறோம்” என்றெல்லாம் சொன்னார்கள் என்றால் 2016 ல் தோல்வியால் ஏற்பட்ட மூளை குழப்பமே காரணம்! தமிழகத்தில், மதுவின்தந்தையாக கருதப்படும் கருனாநிதியின் மகனே இன்று மதுவை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார் என்பது கழக குழப்பத்தின் உச்சக்கட்டமாகும்!
தோல்வி பயத்தால் மூளை குழம்பிப்போயிருக்கும் கழகங்களுக்கு ”தமிழக விரோதம்” ”தமிழக எதிர்ப்பு” ”தமிழ்த்துரோகம்” ”தமிழர்களை ஏமாற்றுதல்” ”தமிழகத்தை வஞ்சித்தல்” ஆகிய பன்புகள் இயல்பாகவே உண்டு! கழகங்களின் கொள்கை என்பது இதுதான்! நீர்நிலைகளை ஆக்கிரமிப்பது, அரசு திட்டங்களில் 40 சதவிகிதத்திற்கும் மேலாக கமிசனாக எடுத்துக்கொள்வது, சாராயக் கொள்ளை, மணல் கொள்ளை, தாதுபொருள் கொள்ளை இத்தகைய செயல்களில் ஆளும் கழகமும் எதிர்கட்சியான கழகமும் என்னேரமும் கூட்டணிதான்! மக்களை ஏமாற்றுவதிலும் இரு கழகங்களும் கூட்டணிதான்!
ஜல்லிக்கட்டு காளைகளை காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகளின் பட்டியலில் சேர்த்தது திமுகவும் காங்கிரசும்தான்! அப்போதைய பிரதான எதிகட்சியான அதிமுக அதை எதிர்க்கவில்லை! காரணம் விவசாய காளைகளை எருதுகளை பசுக்களை கொன்று மேலை நாட்டினருக்கு உணவாக்கி அதேவேளையில் தமிழக விவசாயத்தையும் கலாச்சாரத்தையும் அழிக்க திட்டமிட்டிருந்த அன்னிய கம்பெனிகளிடம் திமுகவும் அதிமுகவும் கூட்டாக கமிசன் ஒப்பந்தம் போட்டிருந்தன! திமுகவும் காங்கிரசும் கொண்டுவந்திருந்த ஜல்லிக்கட்டுக்கு எதிரான சட்டம் மத்தியில் இருந்தாலும், மாநில அரசு விரும்பினால் சிறப்பு சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டு விளையாட அனுமதித்திருக்கலாம்! அதற்கான சட்டப்பிரிவு இந்திய அரசிலமைப்புச்சட்டத்தில் உள்ளது! இந்த இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவை பயன்படுத்தி மாநில சட்டசபையில் தீர்மனம் இயற்றி ஜல்லிக்கட்டு விளையாட அனுமதி வழங்கலாம் என்று ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்ட நாள் முதல் பாஜக சொல்லிவருகிறது!
தமிழக சட்டசபையில் சட்டம் இயற்ற இரு கழகங்களும் முன்வரவில்லை! 2009 முதல் ஜல்லிக்கட்டு சரியாக விளையாட முடியவில்லை! 2011 வரை ஆட்சியில் இருந்த கருனாநிதியும், 2011 முதல் மறணம் வரை ஆட்சியில் இருந்த ஜெயலதாவும் ஜல்லிக்கட்டுக்கு சட்டம் இயற்ற விரும்பவில்லை! இவர்களின் நோக்கம் தமிழக துரோகம்தான்!
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட முடியாததற்கு மோடிதான் காரணம் என்பதுபோல் பேசினார்கள்! ஜல்லிக்கட்டு விளையாட முடியாதபடி சட்டம் கொண்டுவந்தது திமுகவும் காங்கிரசும், மத்திய சட்டம் இருந்தாலும் அது மாநில அரசை கட்டுப்படுத்தமுடியாத வகையில் தமிழகத்தில் சட்டம் இயற்ற மறுத்தது கருனாநிதியும் ஜெயலலிதாவும்! ஆனால் கருனாநிதிகட்சியும் ஜெயலலிதா கட்சியும் மோடிதான் காரணம் என சொல்லி போராட்டம் நடத்தினார்கள்!
தமிழினத்திற்கு துரோகம் செய்தது மட்டுமின்றி, வள்ளுவனுக்கும் பாரதிக்கும் விழாவெடுத்து, முல்லை பெரியாறு அணைமட்டத்தை 142 அடி உயரத்திற்கு உயர்த்தி, காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாட்டி, தூக்குக்கு தயார்ப்படுத்தப்பட்ட தமிழக மீனவர்களை மீட்டெடுத்து, எண்ணற்ற நலத்திட்டங்களின் வாயிலாகவும், தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் பிரதமர் நரேந்திரமோடியை தமிழர்களின் விரோதிபோல் சித்தரித்தார்கள்!
ஆனால், பிரதமர் நரேந்திரமோடி அவர்களோ, முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு அறிவுரை வழங்கி, ஜல்லிக்கட்டு சட்டத்தை தமிழக சட்டசபையிலேயே இயற்ற வைத்து, கருனாநிதியும் ஜெயலலிதாவும் இதை ஏன் செய்யவில்லை என்னும் கேள்வியையும் எழுப்பிவிட்டார்!
விவசாயத்துறை மாநில அரசின் நிர்வாகத்தில் வரும் துறையாகும்! விவசாயத்தை அழித்துக்கொண்டிருப்பது இங்கு ஆளுங்கட்சியாக இருக்கும் கழகங்கள்தான்! விவசாயிகளில் ஏழைகளும் உண்டு, பணக்காரர்களும் உண்டு! விவசாய பணக்காரர்களை பண்ணையார்கள் என்பர்! விவசாயிகளுக்கு ஏதாவது பிரச்சனைகள் என்றால் தீர்த்துவைக்கவேண்டியது விவசாயத் துறையை கையில் வைத்திருக்கும் மாநில அரசுதான்! ஆனால் இங்கு மாநில நிர்வாகத்தை மாற்றி மாற்றி கையில் வைத்திருக்கும் கழகங்கள் பண்ணையார்களை டெல்லிக்கு அனுப்பி தமிழர்களையும் குறிப்பாக ஏழை விவசாயிகளையும் கேவலப்படுத்தும் வகையில் போராட்டங்களை நடத்துகிறார்கள்!
விவசாய காப்பீடு திட்டத்தை அடல்பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் கொண்டுவந்த பாஜகவுக்கு எதிராக, அதே காப்பீடு திட்டத்தின் பிரிமியத்தொகை 15 சதவிகிதமாக இருந்ததை 2 சதவிகிதமாக குறைத்த பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராக டெல்லியில் வேடிக்கை காட்டும் போராட்டத்தை நடத்தினார்கள்! போராட்டத்தை நடத்தியது பண்ணையார்கள், போராட்டத்தை இயக்கியது கழகங்கள்! தமிழக விவசாயத்துறையை நிர்வாகம் செய்துவரும் தமிழக அரசிடம் ஒரு கோரிக்கையைக்கூட இந்த பண்ணையார்கள் வைக்கவில்லை! இவை அனைத்திற்கும் காரணம் கழகங்களின் மூளை குழப்பம்தான்!
கழகங்களுக்கு மாற்றாக தமிழக மக்கள் தேர்ந்தெடுக்கப்போவது பாஜகவைத்தான் என்பது கழகங்களுக்கு தெரிந்திருக்கிறது! எனவேதான் தங்களுக்கு எதிராக தாங்களே போராடுவது, மத்திய அரசுக்கு எதிராக காரணமே இல்லாமல் போராடுவது என திட்டமிட்டுள்ளனர்!
மக்கள் மனங்களில் காலூன்றிவிட்டோம் என்பதை தெரிந்துக்கொண்ட அதிர்ச்சியில்தான் காலூன்ற முடியாது என்று அலறுகிறார்கள்! நாம் காலூன்றியது இப்போதல்ல! 1996 ல் கன்னியாக்குமரி மாவட்டம் பட்பநாபபுரம் சட்டமன்ற தொகுதியிலிருந்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் திரு.C. வேலாயுதம் அவர்கள் சட்டசபைக்குள் நுழைந்தார்! 2001 ல் சென்னை மைலாப்பூர் தொகுதியில் முன்னால் மாநிலதலைவர் திரு.K.N.லட்சுமணன் அவர்களும், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியிலிருந்து இன்றைய அகில பாரத செயலாளர் திரு.H.ராஜ அவர்களும், நாகப்பட்டினம் மாவட்டம் மாயவரம் தொகுதியிலிருந்து திரு. ஜெக.வீரபாண்டியன் அவர்களும், கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதியிலிருந்து திரு. முரளிதரன் அவர்களும் தமிழக சட்டசபைக்குள் நுழைந்து சாதித்துள்ளார்கள்!
2016 தேர்தல் முடிவுகளால் மூளை குழம்பி சம்மந்தமே இல்லாமல் பிரதமருக்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் கழகங்கள் அடுத்துவரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் மக்கள் மனங்களில் இருந்து தூக்கி எறியப்படும்!
தமிழகத்தை பொறுத்தமட்டில் புதிய சூப்பர் ஸ்டார் பிரதமர் நரேந்திர மோடிதான்! உத்திரப்பிரதேசம்போல் உத்திரகாண்ட்போல் அல்லது மணிப்பூர்போல் கோவாபோல் நாளைய தமிழகம் பாஜகவின் வசம் ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை!
நன்றி; n குமரிகிருஷ்ணன்
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.