கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு வன்முறையை கையாண்டு பாஜக.,வின் வளர்ச்சியை தடுக்கமுயலுகிறது என்று தேசியத் தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.
மூன்று நாள் பயணமாக லட்சத்தீவுக்கு செல்லும் வழியில் கேரளமாநிலம், கொச்சியில் அவர் செவ்வாய்க் கிழமை கூறியதாவது:கண்ணனூரில் ஆர்எஸ்எஸ் தொண்டர் சூரக்காடு பிஜு கொலைசெய்யப்பட்டது கண்டனத்துக் குரியது. அரசியலமைப்புச் சட்டப்படி மாநில அரசு செயலாற்ற வேண்டும். தங்களது கட்சி சித்தாந்தத்தின்படி ஆளுங்கட்சியினர் செயல்படக் கூடாது. அரசியல் வன்முறையை மாநில அரசு கண்காணிக்கத் தவறினால், ஆர்எஸ்எஸ் அமைப்பினர், கேரளமக்கள் ஆகியோருடன் இணைந்து மிகப் பெரிய போராட்டத்தை பாஜக முன்னெடுக்கும்.
கேரளத்தில் மார்க்சிஸ்ட் தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பாஜக, ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு வருகிறது.இதன்மூலம், பாஜகவின் வளர்ச்சியை மாநில அரசு தடுக்க முயற்சிசெய்வது தெளிவாகிறது. வன்முறையின் மூலம் பாஜகவின் வளர்ச்சியை மாநில அரசால் தடுத்துநிறுத்த முடியாது என்றார் அமித்ஷா.
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.