காஷ்மீர் எங்களுடையது; காஷ்மீர் பிரச்னைக்கு இந்த அரசு நிரந்தரத் தீர்வை தரும்

சிக்கிம் மாநிலத்தில், ராணுவவீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், 'காஷ்மீர் எங்களுடையது; காஷ்மீர் பிரச்னைக்கு மோடி அரசாங்கம் நிரந்தரத்தீர்வை அளிக்கும். காஷ்மீர் பள்ளத்தாக்கின் தொடர்ச்சியான அமைதியின்மைக்கு பாகிஸ்தானே காரணம்.  இந்தியாவைச் சீர்குலைக்க நினைக்கும் பாகிஸ்தானின் கனவு ஒரு நாளும் பலிக்காது. அண்டை நாடுகளுடன் நட்புறவையே நாம் விரும்புகிறோம்.

ஆனால், பாகிஸ்தானின்போக்கில் மாற்றமே இல்லை. அவர்கள் மாறவேண்டும். இல்லை என்றால் மாற்ற வேண்டும். உலக மயமாக்கலுக்குப் பிறகு, ஒரு நாடு இன்னொரு நாட்டை எந்தவகையிலும் சிதைத்துவிட முடியாது. சர்வதேச சமூகமும் அதை ஏற்காது. நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்ற நிகழ்ச்சியில், பாகிஸ்தான் பங்கேற்க வேண்டும் என்று அழைப்புவிடுத்தோம். நட்புவேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். ஆனால், அவர்களுக்கு அதில் விருப்பமில்லை.

நாம், அமைதியை விரும்பும் அதேநேரத்தில், எதையும் எதிர்கொள்ளவும் நமக்குத் தெரியும். காஷ்மீர்ப் பகுதியில், கடந்த ஜூலையிலிருந்து வன்முறைகள் தீவிரமாகியுள்ளன.. இங்கு நடந்துவரும் போராட்டங்களால், வன்முறைகளால் சுமார் 80 பேர் உயிரிழந்துள்ளனர்" என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...