வறட்சியை சமாளிக்க செயற்கை மழை மத்திய அரசு திட்டம்

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் இந்தஆண்டு மழைபொய்த்து விட்டது. இதனால் கடும்வறட்சி நிலவுகிறது. கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே வறட்சியை சமாளிக்க மத்திய அரசு பலதிட்டங்களைத் தீட்டியுள்ளது.

அந்த வகையில் புவி அறிவியல் அமைச்சகம் நாட்டில் செயற்கைமழை பெய்யவைக்க திட்டம் தீட்டி வருகிறது. இத்திட்டத்தை நடப்பு பருவமழை காலத்தில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைமுறைப் படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

செயற்கைமழை குறித்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சக செயலாளர் எம். ராஜீவன் கூறுகையில், " செயற்கைமழை பெய்விக்க மஹாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. அங்கு மழை மேகங்களை உருவாக்குவதற்காக 200 மாதிரிகள் எடுக்கப்படுகிறது. இத்திட்டம் 3 ஆண்டுகள் செயல் படுத்தப்படும்.
 
இதற்காக 2 ஆய்வு விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. ஒருவிமானம் மழை மேகம் உருவாக்கும் பணியை மேற்கொள்ளும், மற்றொன்று மழைமேகத்தை உருவாக்கும் பகுதிக்கான மாதிரியை எடுக்க பயன்படுத்தப்படும். வளி மண்டலத்தில் எரியும் தன்மையுடன் கூடிய புரோபேன் கியாஸ் மூலம் அயோடின்துகள்கள் தூவப்படும். இவை நீராவியை உருவாக்கும். பின்னர் அவை நீர்தூகள்களாக மாறி மழையாகபொழியும். சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இதுபோன்ற செயற்கை மழை பொழிய செய்துள்ளனர். இத்திட்டம் புனேயில் உள்ள இந்திய தட்பவெப்ப நிறுவனத்தின் வழிகாட்டுதலின்பேரில் சோலாபூரில் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் வறட்சிநிலவும் மற்றபகுதிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...