மாணவர்களிடம் எந்த விதமான கட்டணங்களையும் ரொக்கமாக வசூலிக்க கூடாது என்று அனைத்து கல்லூரிகளுக்கும், பல்கலைக் கழகங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்லூரிகள் மற்றும் பல்கலை கழங்களில் மாணவர்கள் செலுத்தவேண்டிய தேர்வு கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்துவிதமான கட்டணங்களையும் பெரும்பாலும் பணமாகவே செலுத்திவருகிறார்கள். ஒரு சில சமயங்களில் மட்டுமே டிமாண்ட் டிராப்ட், நெட்பேங்கிங் உள்ளிட்ட இதரவழிகளில் செலுத்துகிறார்கள். இந்த நிலையில், மாணவர்களிடம் எந்தவிதமான கட்டணங்களையும் ரொக்கமாக பெறக் கூடாது என்றும் மின்னணு பணப்பரிமாற்றம் (டிஜிட்டல் முறை) மூலமாக மட்டுமே கட்டணங்களை வசூலிக்கவேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்குமாறு பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு (யுஜிசி) உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
மத்திய அரசின் இந்த உத்தரவை தொடர்ந்து, மாணவர்கட்டணம், தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட அனைத்து விதமான கட்டணங்கள், கல்வி நிறுவனங்களின் அன்றாட செயல்பாடுகள் தொடர்பான பணப் பரிமாற்றங்களும் மின்னணு பரிமாற்றம் மூலமாகவே செலுத் தப்பட வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்வி நிறுவனங்களில் மட்டுமின்றி அங்கு படிக்கும் மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளிலும் இந்தநடைமுறை பின்பற்றப்பட வேண்டும். மேலும், கல்வி வளாகங்களில் செயல்படும் உணவகங்கள் ரொக்க முறையை கைவிட்டுவிட்டு மின்னணு பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளுமாறு ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது ரொக்கமாக நடைபெறும் பணப் பரிமாற்றங்களை கண்டறிந்து அவற்றுக்குப் பதிலாக மின்னணு பணப்பரிமாற்ற முறையை நடை முறைப்படுத்து வதற்கான வழிமுறைகளை ஆராயுமாறும் பல்கலைக்கழகங் களை யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்நடைமுறை கடைப்பிடிக்கப் படுவதை கண்காணிக்க அதற்கென தனி அதிகாரி ஒரு வரை நியமித்து மாதந்தோறும் யுஜிசிக்கு அறிக்கை அனுப்புமாறு அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.