நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் துறைமுகங்களை இணைக்கும் தரைவழி மார்க்கமாக தேசிய நெடுஞ்சாலைகள் திகழ்கின்றன. இவை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) நிர்வகிக்கப்படுகிறது. மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் 2008 படி, அச்சாலைகளில் பயணிக்கும் மக்களிடம் இருந்து சுங்க கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த சுங்கச்சாவடி கட்டணங்கள் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, நேற்று (19-03-2025) பாராளுமன்ற மாநிலங்களவையில் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி “தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணங்களுக்கு விரைவில் சலுகைகள் வழங்கப்படும் என்றும், நடப்பாண்டுக்கான சுங்கக் கட்டணங்களுக்கு புதிய கொள்கைகள் வகுத்து வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்”. மேலும், தரமான பயன்பாட்டுடன் கூடிய சாலைகளை மக்களுக்கு வழங்கிட நெடுஞ்சாலைகளின் உள்கட்டமைப்புக்காக மத்திய அரசு அதிகம் செலவிடுகிறது. எனவே இந்த சுங்கக்கட்டண வசூல் அதிகரிப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |