மிலேச்சர்களுக்கு என்ன கதி ஏற்படும் என்பதை உணர்த்தவே நான் சுட்டேன்!

வீரன் வாஞ்சிநாதன் பிரேத விசாரணையில், அவர் போட்டிருந்த உள்சட்டையில் இருந்த துண்டுக் கடிதத்தில் இருந்து..

"அசோக சக்கரவர்த்தி முடிசூடி அரசோச்சிய பாரத மண்ணில், ஐந்தாம் ஜார்ஜ் மன்னன் முடிசூட்டி விழா நடத்துவதற்காக வர இருக்கும் இந்த வேளையில், அவரது ஆட்சியின் சின்னமான நெல்லை மாவட்ட ஆட்சியாளன் கொடுங்கோலன் ஆஷை சுட்டுப் பொசுக்கிப் பிணமாக்குகிறேன்! புண்ணிய பாரத பூமியை அடிமைப்படுத்தி அடக்கி ஆள என்னும் மிலேச்சர்களுக்கு என்ன கதி ஏற்படும் என்பதை உணர்த்தவே நான் சுட்டேன்!

பாரத அன்னைக்கு என் எளிய காணிக்கையாக என் உயிரையும் அர்ப்பணிக்கிறேன். இதற்கு நானே முழுப்பொறுப்பு!

 

இந்தியாவில் முடிசூட்டு விழா நடத்த வர இருக்கும் 5ஆம் ஜார்ஜ் மன்னனை, இந்த மண்ணில் கால் வைத்ததுமே நரகலோகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று மூவாயிரம் பாரத வீரர்கள் காளி மாதாவின் சபதம் எடுத்து, இரத்த சத்தியம் செய்துள்ளனர்!

 

அவர்களில் மிகவும் சிறயவனான, மிகவும் எளியவனான நான், அந்த 5ஆம் ஜார்ஜ் மன்னனின் நடமாடும் சின்னமாகத் திகழ்ந்தவனும் எங்கள் தலைவர் சிதம்பரனாரின் சுதேசிக் கப்பல் கம்பெனியை நிர்மூலப்படுத்தி அழித்தவனும் எண்ணரும் தேசபக்தர்களை வெஞ்சிறையில் பூட்டி, வேதனையில் மாட்டி, செக்கிழுத்துச் சிந்தை நோகச் செய்த செறுக்கனும், அரக்கனுமான கலெக்டர் ஆஷை சுட்டுப் பொசுக்குவதன் மூலம், முடிசூட்டிக் கொள்ள முகமலர்ச்சியோடு வர இருக்கும் ஆங்கிலேய மன்னனுக்கு, இந்திய மக்களின் சார்பில் நான் விடுக்கும் முன் எச்சரிக்கைதான் இந்த செயல்”என முடிந்தது இந்த கடிதத்தில்…

 

வாஞ்சிநாதன் ஆஷ்சை  கொன்று, தற்கொலையும் செய்துகொண்டபோது அவருக்கு வயது 25. மணமானவர். மனைவி பொன்னம்மாள் நிறைமாத கர்ப்பிணி. வெள்ளையனை ஒழிப்பதே தன் குறிக்கோள் என்று உயிர்துறந்த வாஞ்சிநாதன் என்ற பிராமணருக்கு  குடும்பத்தைவிட நாடுதான் முக்கியமாக இருந்தது..

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...