மன அழுத்தத்தை போக்குவதில் யோகா முக்கியபங்கு

சர்வதேச யோகாதினத்தை யொட்டி கோவை ஈஷாயோகா மையம் சார்பில் ஆதியோகி சிலைமுன்பு யோகா நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ், மத்திய சுற்றுலாதுறை மந்திரி மகேஷ் சர்மா, ஈஷா நிறுவனர் சத்குரு ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு மனிதனுக்கும் தனி திறமை உண்டு. அந்த திறமையை வெளிகொண்டு வரும் தொழில்நுட்பம் யோகா. இந்த தொழில் நுட்பம் அனைவருக்கும் சென்றுசேர வேண்டும். ஒருநாட்டை வல்லரசாக்க முடியாது. வல்லரசாக்க நாட்டில் உள்ள மக்களை யோகா மூலம் திறமையான வர்களாகவும், நல்லொழுக்கம் உள்ளவர்களாகவும் மாற்ற முடியும்.

அப்போது அந்த நாடு வல்லரசாக மாறமுடியும். இந்தியா கலாச்சாரத்துக்கு புகழ்பெற்றது. ஆதியோகிதான் யோகாவின் முதல் மனிதர். தற்போது ராணுவத்தினர் பலர் கொல்லப்படுகின்றனர். ஏராளமான சிறுவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதற்கு காரணம் மன நிலையை ஒரு முகப்படுத்த முடியாததுதான்.

மனிதனின் மன நிலையை ஒருமுகப்படுத்த யோகா முக்கியபங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், உபயோகா என்ற சாதாரண யோகா கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு நபர் 100 பேருக்கு யோகா கற்றுக்கொடுத்தால் ஒருஆண்டில் 10 கோடி பேர் யோகா கற்க முடியும்.

உலகிற்கு இந்தியா கொடுத்தபரிசு யோகா. பிரதமர் நரேந்திரமோடி முயற்சியால் யோகா ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 192 நாடுகளில் இன்று யோகாதினம் கடைபிடிக்கப்படுகிறது. யோகாவை கற்பதன் மூலம் ஒரு ஆண் சூப்பர்மேன் ஆகலாம். ஒருபெண் சூப்பர் பெண் ஆகலாம்.

நாட்டில் உள்ள அனைவரும் யோகா கற்பதன் மூலமாக திறமையான வர்களாகவும், நல்லொழுக்கம் உள்ளவர்களாகவும் திகழ முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவ் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் 20 பல்கலைக் கழகங்கள் உள்ளன. மகாராஷ்டிராவில் 20 பல்கலைக் கழகங்கள் உள்ளன. இந்த 40 பல்கலைக்கழகங்களுக்கும் நான்தான் வேந்தர். இங்கு அனைவரும் யோகாகற்க அறிவுறுத்தப்படும். மாணவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் மன அழுத்தத்தால் பாதிக்கப் படுகிறார்கள்.

இந்த மன அழுத்தத்தை போக்க யோகா முக்கியபங்கு வகிக்கிறது. சர்க்கரைநோய் முதல் பல்வேறு நோய்களை குணப்படுத்த யோகா பயன்படுவதாக சொல்லப்படுகிறது. இந்தியா இளைஞர்கள் அதிகமாக உள்ள நாடு. அனைத்து இளைஞர்களும் யோகாகற்பதன் மூலம் இளைஞர்கள் திறமையானவர் களாகவும், ஒழுக்கம் உடையவர்களாகவும் விளங்க முடியும்.போதை, மது, பழக்கத்துக்கு அடிமையானவர்கள் கூட யோகாகற்றால் அதில் இருந்து விடுபட முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...