ஜி.எஸ்.டி கூட்டாட்சி தத்துவத்திற்கு கிடைத்த வெற்றி

நாட்டின் எதிர்கால பாதையை நள்ளிரவில் முடிவு செய்கிறோம். ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்துவது என்பது ஒருகட்சிக்கான வெற்றியல்ல; அரசின் வெற்றியும் அல்ல; கூட்டாட்சி தத்துவத்திற்கு கிடைத்த வெற்றி.
தேசிய வளர்ச்சிக்கான திட்டம். பல ஆண்டுகள் கழித்து இந்தமைய மண்டபத்தில் மிக முக்கியமான வரலாற்று நிகழ்ச்சி இப்போது நடந்து கொண்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான இந்த முக்கிய நிகழ்வு, புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியுள்ளது.

பார்லிமென்ட்டில் ஜி.எஸ்.டி., குறித்து பேசியிருக்கிறார்கள். அந்த விவாதங்களின் இறுதி வடிவமே ஜி.எஸ்.டி., அமலாக்கம். சுதந்திர நள்ளிரவைப்போல இந்த நள்ளிரவும் மிக முக்கியமானதாக உள்ளது.பகவத் கீதையில், 18 அத்தியாயங்கள் இருப்பதைப் போன்று, ஜி.எஸ்.டி., தொடர்பாக, 18 முறை கவுன்சில் கூட்டங்களை நடத்தியிருக்கி றோம்.கனவு நனவானது ஜி.எஸ்.டி., தொடர்பான

பார்வையில், ஆரம்ப காலத்தில் மாநிலங்களுக்கு நிறைய சந்தேகம் இருந்தன. தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு அந்த சந்தேகங்கள் களையப்பட்டன. சர்தார் வல்லபாய் படேல், 500 பகுதிகளைச் சேர்த்து ஒரு தேசமாக காட்டினார். அதே போன்றுதான், இன்று பல வரிகளை ஒருங்கிணைந்து ஜி.எஸ்.டி.,யாக உருவாகியுள்ளது. 'ஒரே தேசம், ஒரே வரி' என்ற கனவு நனவாகியுள்ளது.
 

இந்த வரி நடைமுறையானது, ஊழல் மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்கும். ஜி.எஸ்.டி., அமலாக்கத் துக்கான இந்த விழாவில், நாம் அனைவரும் இணைந்துஇருப்பதை, நம் முன்னோர்கள், முன்னோடிகள் பார்த்தால், மிகவும் பெருமை அடைவர்.

மிகச் சிறந்த நிர்வாகத்தை நோக்கி செல்வதற்கு நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நாட்டில் இருந்த பல்வேறு வரி முறைகளால், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், இங்கு முதலீடுகள் செய்வதில் குழப்பம் அடைந்தனர். இனி, அந்தப் பிரச்னை இருக்காது.

இது வெறும் வரிச் சீர்திருத்தம் மட்டுமல்ல. சமூக நீதிக்கான சீர்திருத்தமும் கூட. ஜி.எஸ்.டி., என்றால் 'குட் அண்ட் சிம்பிள் டேக்ஸ்' என்றும் பொருள். இது டிஜிட்டல் இந்தியாவின் புதிய வடிவம். ஜி.எஸ்.டி., வரியால் பல முனைகளில் விதிக்கப்பட்ட வரிகள், ஒருமுனை வரியாக மாறியுள்ளது. இந்த வரி முறையை அமல்படுத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளித்தன. அதனால்தான், வெற்றிகரமாக நிறைவேற்ற முடிந்தது. இதை அமல்படுத்த முந்தைய அரசுகள் தொடர்ச்சியாக பாடுபட்டு வந்துள்ளன. நாட்டை முன்னேற்றப்
பாதைக்கு கொண்டு செல்ல இது உதவும். ஒரு பொருளுக்கு டில்லியில் ஒரு விலை, அருகேயுள்ள குர்கானுக்கு சென்றால், மற்றொரு விலை என, அருகருகே உள்ள பகுதிகளிலேயே தனித்தனி விலை இருந்து வந்தது. இனி, அது நடக்காது.


ஒரு நாடு, ஒரு வரி என்ற, ஜி.எஸ்.டி., வரி நம்மை ஒன்று சேர்க்கிறது. இதுவரை இருந்த, வரி குழப்பங்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது. நேர விரையும் மிச்சப்படுத்தப்படுகிறது. நம் செயல் பாட்டையும் மேம்படுத்துகிறது.

சுதந்திரம் அடைந்து, 70 ஆண்டுகளுக்குப் பிறகும், நாட்டில் உள்ள ஏழைகளுக்கு, பல வசதிகள் கிடைக்காமல் உள்ளது. அவர்களுக்கு அனைத்தும் கிடைக்க, ஜி.எஸ்.டி., உதவும். இனி, முறையான கணக்கு இருக்கும் என்பதால், நாட்டில் பேதம் என்பது இருக்காது.

ஜி.எஸ்.டி., கவுன்சில் தலைவராக நிதி அமைச்சரும், அதன் உறுப்பினர்களாக, மாநில நிதி அமைச்சர் களும் மிகச் சிறப்பான முறையில் விவாதம் செய்து, ஆலோசித்து, இந்த வரிவிதிப்பு முறையை கொண்டு வந்துள்ளனர். அவர்களுக்கு என்னுடைய தனிப்பட்ட பாராட்டை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு, நரேந்திர மோடி பேசினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...