இந்தியாவின் வளர்ச்சியை கண்டு எரிச்சல் அடையும் சீனா

1962ம் ஆண்டு இருந்த இந்தியா இப்போது உண்மையிலேயே இல்லை. அப்போது இருந்ததை விட பல மடங்கு பொருளாதார வளர்ச்சி மற்றும் ராணுவ பலத்துடன் இந்தியா விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து வியாபித்து நிற்பதுதான் சீனாவை கடும் டென்ஷனுக்குள்ளாக்கியுள்ளது. இதனால்தான் சீனா நம் மீது காரணமே இல்லாமல் கோபம் காட்டுவதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவும் இதையேதான் கூறுகிறது. உண்மையிலேயே இந்தியா பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. சீனாவை பின்னுக்குத் தள்ளும் வகையில் இந்தியாவின் வளர்ச்சி அபரீதமாக இருப்பதாக பென்டகன் கூறியுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை அது அமெரிக்க அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

இது மட்டுமல்லாமல், உலக நாடுகளுடன் இந்தியா இதுவரை இல்லாத அளவு நெருங்கி வருவதையும், பல உலக நாடுகள் இந்தியா மீது பாசத்தைப் பொழிவதும் கூட சீனாவுக்குப் பிடிக்கவில்லை. இடையில் விட்டுப் போயிருந்த ரஷ்ய நட்பையும் இந்தியா மீண்டும் வலுவாக்கி விட்டதும் சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பக்கம் ஆப்கானிஸ்தானுடன் உறவு பாராட்டி பாகிஸ்தானை உலக நாடுகளிடம் தனிமைப்படுத்தும் இந்தியாவின் முயற்சிக்கு பெரும் வெற்றி கிடைத்து வருவதும் சீனாவின் கோபத்துக்கு ஒரு காரணம்.

இன்னொரு பக்கம் ஈரானுடன் உறவு பாராட்டி துறைமுக ஒப்பந்தம் போட்டு அதை பாகிஸ்தானுக்கு எதிராக திருப்பி விடப்பட்டுள்ளது இன்னொருவகை எரிச்சல்

உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தி என்ற நிலையை நோக்கி சீனா போய்க் கொண்டுள்ளது. ஆனாலும் அதற்கு கடும் போட்டியாக இந்தியாவும் வளர்ந்து வருவது சீனாவை கவலைக்குள்ளாக்கியுள்ளது. இது இன்னொரு எரிச்சல்.

பொருளாதார ரீதியில் இந்தியா சுய சார்பை நோக்கி போய்க் கொண்டுள்ள அதேசமயத்தில் ராணுவ ரீதியிலும், விண்வெளி ஆய்விலும் இந்தியா கலக்கிக் கொண்டிருப்பதும் சீனாவை எரிச்சலுக்குள்ளாக்கியுள்ள இன்னொரு விஷயமாகும்.

பல சர்வதேச நாடுகள் சீனாவை விட இந்தியாவை முக்கியமாக கருதுவதும் கூட சீனாவுக்குப் பிடிக்கவில்லை. அதையும் அது வெறுக்கிறது. இதுவும் கூட இந்தியா மீது சீனா ஆத்திரம் கொள்ள இன்னொரு காரணம்.

இந்திய எல்லையில் கடந்த சில வருடங்களாகவே தனது படைகளை சீனா அதிகரித்து வருகிறது. மிக நவீனமான சிசிஎஸ்-5 ரக அணு ஆயுத ஏவுகணைகளையும் நிலை நிறுத்தியுள்ளது. எல்லையில் பாராசூட் படையினரின் எண்ணிக்கையையும் போர் விமானங்களின் எண்ணிக்கையயும் அதிகரித்துள்ளது சீனா. மத்திய சீனாவின் குயின்காய் மாகாணத்தில் டெலின்ஹா, டா குவைடாம் ஆகிய இடங்களில் 60 ஏவுகணை ஏவுதளங்களை சீனா அமைத்துள்ளது. இங்கிருந்து வட இந்தியாவை குறி வைப்பது எளிது என்பதால் இந்த ஏவுதங்களை சீனா கட்டியுள்ளதை சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் உறுதி செய்கின்றன.

ஆனால் இந்தியா பழைய மன்மோகன் சிங்காக இல்லை என்பதை சீனா மறந்து விட்டது. 1962ம் ஆண்டு சீனாவிடம் படு மோசமாக தோற்ற போது இருந்த நிலையில் இந்திய ராணுவம் இப்போது இல்லை. இந்தியாவும் தனது படைகளை பலமடங்கு அதிகரித்துவிட்டதோடு, ஆயுதங்களையும் குவித்து விட்டது. நிச்சயம். சீனாவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு இந்தியாவின் வலிமையும் பலமாகவே உள்ளது.

நமது படையினருக்கு மிக நவீன ஆயுதங்கள், மிகத் தரமான பயிற்சிகள் தரப்பட்டு இந்திய ராணுவம் உலகின் மிகச் சிறந்த படைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. தனது ஏவுகணைகளின் சக்தியையும் பயணிக்கும் தூரத்தையும் தொடர்ந்து அதிகரித்து வரும் இந்தியா, மிக நவீனான சுகோய் 30 எம்கேஐ ரக போர் விமானங்களை சீனாவை ஒட்டிய பகுதிகளி்ல் எப்போதும் தயார் நிலையில் வைத்துள்ளது. இவை உலகின் நவீனமான போர் விமானங்களில் முக்கியமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவுக்கு எல்லை பிரச்னை நம்மிடம் மட்டும் அல்ல . 21 நாடுகளிடம் எல்லை பிரச்னை, இது போக ஐரோப்பிய ஒன்றியத்தில் சீனா கடற்படை தளம் அமைக்கிறது ,, இது மேலை நாடுகளாகிய வல்லரசு நாடுகளுக்கு புடிக்கவே இல்லை அந்த வல்லரசுகளும் சீனாவை தீர்த்து கட்ட இந்தியாவின் கண் அசைவுக்காக காத்து இருக்கின்றன ,, ஒரு தீப்பொறியை எதிர்பார்க்கிறது

அது மட்டுமல்ல. உலகமும் இப்போது நிறையவே மாறி விட்டது. எந்த நாடுகள் உலகத்திற்கு புடிக்காதோ அந்த நாடுகள் ( 2 நாடுகள் தான் வட கொரியா, பாகிஸ்தான் ) எல்லாம் சீனாவுக்கு நண்பன் இந்தியா இப்போது பல உலக வல்லரசுகளின் செல்லப் பிள்ளை.

பல நாடுகளின் உயிர் நண்பனாக உலகில் வளம் வருகிறது இந்தியா ,, இஸ்ரேல் பிரதமர் கூறியதை உலக நாடுகள் ஆராய்ந்து பார்க்காமல் விடுமா என்ன .. அமெரிக்கா அதிபர் வாசல் வரை வந்து வரவேற்றதையும், வழி அனுப்பியது உலகம் மறக்குமா என்ன

இந்தியாவைப் போன்றதொரு நல்ல நப்பு நாடு அடிவாங்குவதை இந்த நாடுகள் நிச்சயம் வேடிக்கை பார்க்காது. எனவே சீனா போர் தொடுக்க முற்பட்டால் நிச்சயம் சீனாவை பலவிதங்களில் இந்த நாடுகள் அழித்து ஒழிக்க முற்படும்.என்ற நிலை தான் இப்போது உள்ளது ..

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...