பா.ஜ.கவின் குடியரசுத் துணைதலைவர் வேட்பாளராக வெங்கய்ய நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார்.
வேட்பாளரை தேர்வு செய்வதற்கான பாஜக ஆட்சிமன்றகுழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் மாலையில் நடைபெற்றது. இதையடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி குடியரசு துணைத்தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. மனு தாக்கல்செய்ய நாளை கடைசி நாள் ஆகும்.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக 18 எதிர்க்கட்சிகள் கொண்ட கூட்டணி வேட்பாளாராக கோபாலகிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து ஆளும் பாஜக கூட்டணி வேட்பாளராக வெங்கய்யநாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார்.
1949ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பிறந்த வெங்கய்யாநாயுடு தனது அரசியல் வாழ்வை ஆந்திரா பல்கலைக்கழக கல்லூரிகள் மாணவர் தலைவராக துவங்கினார். அப்போது இவர் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியில் இருந்தார். இவரதுபேச்சாற்றல் காரணமாக விரைவிலேயே பெரும்புகழை பெற்றார். 1972ல் நடைபெற்ற ஜெய் ஆந்திரா இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றார்.
1978 மற்றும் 1983ம் ஆண்டுகளில் உதயகிரி சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப் பட்டார். வாஜ்பாய் ஆட்சி காலத்தில் வெங்கையாநாயுடு ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவிவகித்தார். மோடி தலைமையிலான தற்போதைய மத்திய அரசில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார். 1998, 2004 மற்றும் 2010ம் ஆண்டுகளில் மாநிலங்கள் அவை உறுப்பினராக பதவிவகித்தார்.
2002ல் பாஜகவின் தேசிய தலைவராக இருந்தபோது தீவிர சுற்றுப்பயணம் செய்து கட்சியை வளர்த்தார். 2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவால் ஆட்சியைபிடிக்க முடியவில்லை என்றபோதும், தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது நகர்ப்புற மேம்பாட்டுதுறை அமைச்சராக உள்ளார்.
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.