நிதியாண்டின் தொடக்கத்தை ஜனவரிமாதமாக மாற்றுவது குறித்து தீவிரமாக பரிசீலனை

நிதியாண்டின் தொடக்கத்தை ஜனவரிமாதமாக மாற்றுவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் இந்த தகவலை அரசு வெளியிட்டுள்ளது.


தற்போது உள்ள நடைமுறைப்படி நிதியாண்டின் தொடக்கம் ஏப்ரல்மாதமாக வரையறுக்கப்பட்டுள்ளது. வருமான வரிக் கணக்குத்தாக்கல் உள்பட பல்வேறு நிதி சார்ந்த நடவடிக்கைகள், ஆண்டுதோறும் அந்தமாதத்திலேயே தொடங்குகின்றன. ஆண்டின் தொடக்கம் ஜனவரியாகவும், நிதியாண்டின் தொடக்கம் ஏப்ரலாகவும் இருப்பதற்கு பதிலாக இரண்டையும் ஒரேமாதிரியாக மாற்றியமைக்கலாம் எனக் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.


இதையடுத்து அது குறித்து பரிசீலித்து வரும் மத்திய அரசு, விரைவில் அந்தவிவகாரம் தொடர்பாக முக்கிய முடிவினை எடுக்க உள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக மக்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
நிதியாண்டை மாற்றியமைப்பது குறித்து ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக அரசு முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் சங்கர் ஆச்சார்யா தலைமையில் பிரத்யேககுழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக்குழு, தனது அறிக்கையை அண்மையில் தாக்கல் செய்தது.


அதை பரிசீலித்த பிறகு இதுதொடர்பாக உரிய முடிவெடுக்கப்படும். ஒருவேளை ஜனவரி மாதத்தில் இருந்து நிதியாண்டை தொடங்கினால், நவம்பர் அல்லது டிசம்பரில் மத்தியபட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா? என்று கேள்வி எழுப்பப்படுகிறது.

அதுகுறித்து தற்போது எந்தக்கருத்தும் தெரிவிக்க இயலாது என்று அந்தபதிலில் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார். நிதியாண்டின் தொடக்கத்தை ஜனவரிக்கு மாற்றும்பட்சத்தில் வரித்தாக்கலுக்கான காலக் கெடு உள்பட பல்வேறு விதிகளைத் திருத்தியமைக்க வேண்டிய நிலை அரசுக்கு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


விவசாயக் கடன் தள்ளுபடி இல்லை: இதனிடையே, மக்களவையில் எழுப்பப்பட்ட மற்றொருகேள்விக்கு பதிலளித்த மத்திய நிதித் துறை இணையமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார், விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்யும்திட்டம் எதுவுமில்லை என்று தெரிவித்தார். அதுதொடர்பான விஷயங்கள் எதையும் அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...