டார்ஜிலிங்கில் சகஜநிலை திரும்பாததற்கு மம்தா பானர்ஜியின் அணுமுறைகளே காரணம்

டார்ஜிலிங்கில் சகஜநிலை திரும்பாததற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அணுமுறைகளே காரணம் என மத்திய அரசு குற்றம்சாட்டி உள்ளது.

கூர்க்காலாந்து தனிமாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) உள்ளிட்ட அமைப்பு கள் ஒன்றுகூடி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அங்கு போராட் டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் சுற்றுலாத் தலமான டார்ஜிலிங் கில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.

இது தொடர்பாக நாடாளு மன்றத்தில் மார்க்சிஸ்ட் எம்பி முகமது சலீம் பூஜ்யநேரத்தில் பேசியதாவது:

பள்ளிகளில் வங்கமொழியைக் கட்டாயமாக்க மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி முயற்சிசெய்ததுடன், மலைப்பகுதி (டார்ஜிலிங்) நிர்வாகங்களிலும் தலையிடுகிறார். இதனால் அங்குபோராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த மக்கள் மீது போர்தொடுக்க வேண்டாம்.

மேற்குவங்க மாநில உணவுத் துறை அமைச்சர் மலைப் பகுதிகளுக்கு அத்தியாவசியப் பொருட் கள் எடுத்துச் செல்வது தடுக்கப்படும் என மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இந்தவிஷயத்தில் மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. அரசியலமைப்புச் சட்டப்படி ஆட்சி நடத்த மம்தாவுக்கு அறிவுறுத்த வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த குமார், ‘டார்ஜிலிங்கில் தற்போதைய நிலவரம் மிகவும்மோசமாக உள்ளது. அங்கு சகஜநிலை திரும்பவேண்டும். அமைதியான மலைப்பகுதியில் தீ பற்றி எரிகிறது என்றால் அதற்குக்காரணம் முதல்வர் மம்தாவின் அணுகுமுறைதான். மீண்டும் அங்கு அமைதி நிலவினால் மட்டுமே மத்திய, மாநில அரசுகள் மற்றும் கூர்க்காபிராந்திய நிர்வாகம் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தமுடியும்’ என்றார். இந்த விவாதத்தின்போது மக்களவையில் திரிணமுல் காங்கிரஸ் எம்பிக்கள் எவரும் இல்லை.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...