உணவு பாதுகாப்பு சட்டம், செப்டம்பர் 2013ல் யூபிஏ கூட்டணியால் (காங்கிரஸ், திமுக + ) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, தமிழகத்தில் வறுமை கணக்கெடுப்பின்படி கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் 62.55%, நகரங்களில் வசிப்பவர்களில் கிட்டத்தட்ட 38%க்கு மட்டும் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்படது.
32 மாநிலங்களில் / யூனியன் பிரதேசங்களில் இது ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது. தமிழகம் தான் இத்திட்டத்தை ஏற்றுள்ள கடைசி மாநிலம்.
இத்திட்டம் குடும்பங்களை பொருளாதார ரீதியாக மூன்று வகையாகப் பிரிக்கிறது
1) வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவை.
2) வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவை.
3) வறுமையிலும் வறுமையான குடும்பங்கள்.
இவற்றில் வறுமையிலும் வறுமையான குடும்பங்களுக்கு மாதம் 35 கிலோ அரிசி வழங்கவும், மற்ற இருவகைக் குடும்பங்களுக்கு ஒவ்வொரு நபருக்கும் 5 கிலோ ( ஏழு நபர்கள் இருந்தால் 35 கிலோ) அரிசி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் இம்மாதிரி குடும்பங்களை வகைப்படுத்தாமல் எல்லா அரிசி அட்டைக் குடும்பங்களுக்கும் மாதம் 12 கிலோ முதல் 20 கிலோ வரை அரிசி இலவசமாக வழங்கி வருகிறது.
இப்போது, ஒவ்வொரு நபருக்கும் 5 கிலோ அரிசி என்று வழங்கவேண்டும் என்ற நிலையில்,மாநில அரசுக்கு இவ்வகையில் இரண்டாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் கூடுதல் செலவு ஆகும்.
சென்ற வருடம் நவம்பர் மாதம் வரை இத்திட்டத்தை ஏற்றுக் கொள்ளாமல் தமிழகம் தவிர்த்து வந்த நிலையில், இத்திட்டத்தை ஏற்றுக் கொள்ளாவிடில் மத்திய அரசுத் தொகுப்பில் இருந்து குறைவான அளவு அரிசியே மானிய விலையில் கிடைக்கும்.
அதன் காரணமாக, இன்னும் சில ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவு செய்ய வேண்டும் என்ற சிக்கலில் மாட்டிக் கொண்ட தமிழக அரசு நவம்பர் 2016 ல் இத்திட்டத்தை ஏற்றது.
ஆகவே, இது மோடி கொண்டு வந்த திட்டம் அல்ல, மன்மோகன் காங்கிரஸும், கலைஞரின் திமுகவும் 2013ல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய திட்டம் என்று தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
வழக்கம் போல், செயல் தலைவர் இத்திட்டத்தில் திமுக பங்கை வெளிப்படுத்தாது முதலைக்கண்ணீர் வடிக்கிறார்.
ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் 1.92 கோடி ரேஷன் கார்டுகளில் ஒன்று கூட நீக்காமல் அரசு அத்தனை கார்டுகளுக்கும் அரிசி மற்றும் இதர பொருட்கள் வழங்கவேண்டும் என்கிறார்.
ரேஷன் கார்டுடன் ஆதார் எண்களை இணைத்து, பல லட்சம் போலி ரேஷன் கார்டுகள், அதிகப்படியான நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டாயிற்று.
ஸ்மார்ட் கார்டுகள் வழங்குதில் அரசு சுணக்கம் காட்டுவதின் காரணம் என்ன என்ன என்று விவரம் புரிந்தவருக்குப் புரியும்.
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.