தமிழக ரயில் பாதை மேம்பாட்டுக்கு மொத்தம் ரூ. 3,940 கோடிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
மதுரை-வாஞ்சி மணியாச்சி இரட்டை ரயில்பாதைக்கு ரூ. 1,872 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் ரயில்பாதை மேம்பாட்டுக்கு மொத்தம் ரூ. 3,940 கோடிக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 348 கி.மீ. தூரத்துக்கு புதியசாலைகள் அமைக்கப்படும். ரயில் போக்குவரத்தை மேம்படுத்த புதியரயில் பாதைகள் உதவும். சென்னை கன்னியாகுமரிக்கு 4 வழிச் சாலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றிரண்டு மாதங்களில் இப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்படும், சென்னையிலிருந்து பாண்டிச்சேரிவரை நீர்வழிப் போக்குவரத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதெல்லாம் வந்து விட்டால், சாலை வழியாகவும், ரயில் வழியாகவும், நீர் வழியாகவும் சென்னை முதல் கன்னியாகுமரி வரையுள்ள அனைத்துப் பகுதிகளும் முழுமையாக இணைக்கப்படும்.
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.