பிரதமர் மோடி எதிர்பார்த்தது போலவே, குடிரசுதலைவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இந்நிலையில், வரும் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்று வதற்கான திட்டங்களை பிரமதர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் செய்து வருகின்றனர்.
மேலும், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மேற்குவங்காளம், ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பாஜக வெற்றியை குவிக்க விரும்புகிறது. அதனால், இந்தமாநிலங்களில் பாஜக வலுவாக காலூன்றுவதற்கு வசதியாக மத்திய அமைச்சரவையில் முக்கியத்துவம் கொடுக்க மோடியும், அமித்ஷாவும் முடிவு செய்துள்ளனர்.
மேலும், மனோகர் பாரிக்கர், கோவா முதலமைச் சராகவும், வெங்கையா நாயுடு குடியரசு துணை தலைவராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர், சுற்றுச்சூழல் அமைச்சர் அனில்தவே திடீர் மரணம் அடைந்தார். இதனால் 3 அமைச்சர்கள் பதவிகள் காலியாக உள்ளது.
அதனால், இந்த இடங்களுக்கு புதிய அமைச்சர்களை நியமித்து, விரிவு படுத்தும் போது, தென் மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த பாஜக எம்.பி.க்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் மத்திய அமைச்சரவையில் இடம்அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.