அயோத்தி வழக்கில் திடீர் திருப்பம்.அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்துக்கு சற்றுதொலைவில் மசூதியை கட்டலாம்' என ஷியா முஸ்லிம் வாரியம், உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இதுமிகவும் நல்லசெய்தி .இது பற்றிய செய்திக்கு தொடர்புடைய ஒரு வரலாற்று நிகழ்வு .
ஐ. நா. சபையில் ஐ. நா.வுக்கான பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் நடந்தது. அதில் வழக்கம்போல பாகிஸ்தான் நாட்டுக்கான .ஐ. நா. பிரதிநிதி காஷ்மீர் எங்களுக்கே சொந்தம் – என கூறி ,அதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்கள் இதோ – ஆதாரங்கள் இதோ -ஆதாரங்கள் இதோ -என பலப்பல -பல்வேறு வரலாற்று ஆவணங்களை சமர்ப்பித்து, உறுதியான குரலில் இதன் மூலம் காஷ்மீர் பாகிஸ்தானுக்குதான் சொந்தம் ஆம் காஷ்மீர் பாகிஸ்தானுக்கு மட்டும்தான் சொந்தம் என .ஐ. நா சபையில் அரை மணிநேரம் பேசி முகத்தில் பெருமிதம் பொங்க இருக்கையில் அமர்ந்தார். ஐ. நா சபையே அவர் பேச்சை கை தட்டி வரவேற்றது .
பாகிஸ்தான் நாட்டுக்கான .ஐ. நா. பிரதிநிதி தனது வாதத்திறமையால் இந்தியாவை வீழ்த்தியதாக சபை எண்ணியது .இப்போது இந்தியாவுக்கான ஐ. நா. பிரதிநிதி காஷ்மீர பிரச்சினையை பேச இருக்கை விட்டெழுந்து என்னுரை தன்னை துவக்கு முன்னர் சின்னதோர் பழங்கதை ஆம் ரிஷிகள் காலத்து கதை உங்கட்கு உரைப்பேன் என துவக்கினார் .தற்போதைய காஷ்மீர் எனும் பெயர்வரக் காரணமான காஷ்யப முனிவர் காஷ்மீர் ஏரியைக் கண்ட அக்கணத்தில் குளித்திட நல்வாய்ப்பு குதிர்ந்தது என்று களிப்புடன் ஆடைகள் களைந்து நீராடவிருப்பு கொண்டு நின்றார் களைந்த ஆடையை அருகில் பாறைமேல் விளையும் விபரீதம் அறியாமல் வைத்தவர் முப்புரி நூலினை மும்முறை மாற்றி பின் தொப்பென குதித்தார் நீரில் மூழ்கிட குளிர்நீர் கொடுத்த களிப்பும் உவகையும் துளிர் விடும் எண்ணம் செயல் வடிவாக்கிட காத்திரம் குளித்தவர் மேலே எழுந்தார்.
அப்போது பாறை மேல்வைத்த ஆடை காணாமல் திகைத்து நின்றார் .திடுக் கிட்டார் மனம் வெதும்பினார் .ஆடையற்ற கையறுநிலை -யாரோ எடுத்தவர்? என யோசிக்க பாகிஸ்தானியன் ஒருவன் திருடி இருக்கலாம் என்று அத்திசை நோக்க ,அங்கு இரு பாகிஸ்தானியர்கள் அவர் துணிகளை களவாடி செல்வதை பார்த்தார் இந்தியன் காஷ்யப முனிவர் என்று கூறிவர ,இடை மறித்த பாக் பிரதிநிதி கொதித்து எழுந்தார்.
நிறுத்துங்கள் உங்கள் பழங்கதையை என்ன பிதற்றல் என்ன உளறல் காஷ்யப முனிவர் எனும் ஹிந்து முனிவர் காலத்தில் பாகிஸ்தானியர்கள் நாங்கள் அங்கு இல்லையே என பதிலுரைத்து தப்பான பேச்சை தயவுடன்நிறுத்தும் என்றார் .உடனே இந்தியபிரதிநிதி இது இது இதுதான் எனக்கு வேண்டும் இப்பொழுது உலகத்து தெளிவாய்புரிந்து இருக்கும். அப்போது இல்லாத பாகிஸ்தானியர்கள் இப்போது காஷ்மீர் தமதென்று சொல்வது சரியா ? என்றவாறு இருக்கையில் அமர்ந்தார் .
ஐ. நா சபை மொத்தக்கூட்டமும் எழுந்து நின்று ஆர்பரித்து கைதட்டி இந்தியாவின் வாதத்தை ஆமோதித்தது. பாகிஸ்தான் வெட்கி தலைகுனிந்தது. ஆம் இது காஷ்மீர்க்கும் மட்டும் அல்ல அயோத்தி பிரச்சனைக்கும் பொருந்தும் .மொகலாய மன்னர் பாபர் கி.பி 16 ம் நூற்றாண்டை சேர்ந்தமன்னர் .அவர்தான் மொகலாய சாம்ராஜ்யத்தின் முதல் அரசர் .ஆனால் அதற்கு முன்பிருந்தே ஹிந்து மதம் இருந்து வருகிறது. இந்தியாவில் உள்ள முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவர்களின் மூதாதையர்கள் ஹிந்துக்கள் தான் .
இதில் எள்ளளவேனும் சந்தேகம் இல்லை. அகண்ட இந்தியாவை பின்னி பிணைத்து நிற்பது ஹிந்துப் பண்பாடு. காஷ்மீரில் பிறந்தவனும் குமரியை காணாமலேயே அறிந்திருந்தான். காமரூபத்தில் (இன்றைய அசாம்) பிறந்தவனும் காந்தாரத்தை (இன்றைய ஆப்கானிஸ்தான்) அறிந்திருந்தான். போக்குவரத்து வசதிகள் நவீனமாக இல்லாத அந்தக் காலகட்டத்திலேயே நாடு முழுவதும் அப்படியொரு பிணைப்பு இருந்தது.
ஆனால் வந்தாரை வாழவைக்கும் குணம் கொண்ட ஹிந்து மதத்தின் கொள்கை தான் தற்போதைய அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம். ஹிந்துக்கள் சகிப்புத்தன்மை குறித்து சிகாகோ உரையின் கன்னிப்பேச்சில் குறிப்பிட்டார் சுவாமி விவேகானந்தர்:“உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவித் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன்.
பெருமைமிக்க சொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்..”ஆனாலும் நமது பெருந்தன்மை நம்மைக் காக்கவில்லை. நாம் அடிமைப்பட்டோம். நமது போர்க்குணம் மழுங்கடிக்கப்பட்டதன் விளைவே நமது வீழ்ச்சிக்குக் காரணம் என்பார் சுவாமி விவேகானந்தர். அது மட்டுமல்ல,
பேரரசுக் காலங்கள் முடிவுற்று சிற்றரசர்களின் கும்பலாக நாடு மாறிப்போனபோது, ஒற்றுமையின்மையும் சுயநலமும், மட்டு மீறிய கேளிக்கைகளும் நாட்டை பலவீனப்படுத்தின. அதன் விளைவாகவே நாம் அந்நியர்களிடம் அடிமைப்பட நேர்ந்தது.அந்நிய மதங்கள் இந்தியாவில் வேரூன்றின.ஆதலால் மேற்சொன்ன வாதங்களை நினைவு கூர்ந்து இந்தியாவில் அனைத்து மதத்தினரும் பரஸ்பரம் விட்டு கொடுத்து சண்டைகள் சச்சரவுகள் இன்றி வாழ்வோம் .அதன் மூலம் அயோத்தி பிரச்சனை முடிவுக்கு வரட்டும் .இது தான் இந்தியா வல்லரசாக விரும்பும் தேசபக்தி கொண்ட ஒவ்வொருவரின் ஆசையும் கூட. ஒரு கொசுறு செய்தி – இசுவாகு குல தோன்றல் ஸ்ரீராமர் மற்றும் சோழ மன்னன் கரிகாலன் மூதாதையர் கொடி வழி முறைகளில் – இரண்டிலுமே இந்த காஷ்யப முனிவர் பெயர் உள்ளது – இது மிகவும் ஆச்சரியமான விஷயம்..
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.