அயோத்தியில் முஸ்லிம்கள் விட்டுக் கொடுக்கிறார்கள், இங்கே இருப்பவர்களுக்கு என்ன?

அயோத்தியில், ராமர் கோவிலை கட்டிக் கொள்ளலாம்' என ஷியா வாரியம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததைது பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறியதாவது.

''இந்த வழக்கு 1948-ல் இருந்தே தொடங்கி விட்டது. சம்பந்தப் பட்ட இடத்தில் ராமர்சிலை வைத்து வழிபாடு தொடங்கிய அந்தக் காலகட்ட த்திலேயே அதற்கு எதிர்ப்புதெரிவித்து வழக்கு தொடுத்தவர்கள் ஷியா வக்ப் போர்டுதான். 

2010-ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூட, 'இந்த இடத்தில் கோவில் இருந்தது. அதை நீக்கித் தான் மசூதி கட்டப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்கள். சம்பந்தப்பட்ட இடத்தில்,  ராமஜென்ம பூமி நியாஸ் அமைப்பு மற்றும் அங்கே இருந்த கோவில் டிரஸ்டி என 2 பாகம் இந்துக்களுக்கு. 3-வது பாகம் ஷியா வக்ப் போர்டுக்கு. ஒரிஜினலாக வழக்குதொடுத்ததே ஷியா வக்ப் போர்டுதான். எனவே, சன்னி இஸ்லாமியருக்கு இதில் சம்பந்தமே கிடையாது. 'நியாயமான தூரத்தில் மசூதியைக் கட்டிக் கொள்கிறோம்' என்று ஷியா தரப்பினரே சொல்லிவிட்டனர். 

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் அகழ்வாராய்ச்சிசெய்து, ஏற்கெனவே அங்கே கோவில் இருந்ததை உறுதிப்படுத்தி யிருக்கிறார்கள். இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கிலும்கூட 2 இந்து நீதிபதிகளும் சேர்ந்து கொடுத்திருக்கும் தீர்ப்பில், 'கோவிலை இடித்து அதன் மீது  கட்டப்பட்டது' என்று குறிப்பிட்டுள்ளார்கள். மற்றொரு இஸ்லாமிய நீதிபதியோ, 'கோவில் இடித்த இடிபாடின் மீது கட்டப்பட்டுள்ளது'  என்று குறிப் பிட்டுள்ளார். அதாவது 'இடித்துக்கட்டியது' என்ற வார்த்தையை தவிர்த்திருக்கிறார். எனவே, அங்கே ஏற்கெனவே கோவில்தான் இருந்தது என்பதை 3 நீதிபதிகளுமே ஒப்புக்கொள்கிறார்கள்.

என்னைப் பொருத்தவரையில், அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமி முழுவதுமே இந்துக்களுக்குச் சொந்தம். ஆனால், நீதிமன்றத் தீர்ப்பில் 3-வது பாகம் ஷியாவக்ப் போர்டுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர்களும் கூட, 'நாங்களே இந்த இடத்தை விட்டுக் கொடுத்துவிட்டு நகர்ந்து விடுகிறோம்' என்று சொல்லி விட்டதால், ஒட்டுமொத்தமாக வழக்கே முடிவுக்கு வந்துவிடுகிறது. 


2004-லேயே இந்த முடிவைக் கிட்டத்தட்ட நாங்கள் நெருங்கினோம். அதாவது ஒரிஜினல் வழக்குதா ரர்களான ஷியா பிரிவினர் அப்போதே விட்டுக்கொடுக்கத் தயாராகவே இருந்தார்கள்.  ஆனால், அப்போது வாஜ்பேயி அரசு தேர்தலில் தோற்றுப் போனதால், தீர்வு கிடைக்காமல் போனது. சுருக்கமாகச் சொன்னால், அயோத்தியில் உள்ள முஸ்லிம்கள் விட்டுக் கொடுக்கத் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால், மதவெறியைத் தூண்ட நினைப்பவர்கள் தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்'' என்று வெடித்து முடித்தார் ஹெச்.ராஜா!

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...