வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்த விவாதத்தின் மீது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தின் திருச்செந்துறை கிராமத்தில் நடந்த நிகழ்வை மேற்கோள் காட்டி பேசினார். இப்பிரச்னையில் சிக்கிய 1,800 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் குறித்து அவர் குறிப்பிட்டார்.
வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா மீதான விவாதம் ராஜ்யசபாவில் நடந்து வருகிறது.
அப்போது நிர்மலா சீதாராமன் பேசியதாவது: தமிழகத்தில் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சந்திரசேகர சுவாமி கோவில் உள்ளது. இங்கு தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் இங்கு வாழ்ந்து வந்தனர். 408 ஏக்கர் நிலம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது. இது எப்படி பிரச்னைக்கு உள்ளானது? இக்கிராம மக்கள், தங்களுக்குள் நிலங்களை வாங்கும் போதும், விற்பனை செய்யும்போதும், வக்ப் வாரியத்திடம் தடையில்லா சான்று பெற்று வர வேண்டும் என அவர்களிடம் தெளிவாக கூறப்பட்டது.
டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக, மாவட்ட கலெக்டர் தவறான தகவல்களை பதிவு செய்ததால், முழுகிராமமும் தவறான பதிவில் சேர்க்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு கிராமவாசியும் தனது நிலம் தொடர்பாக ஏதேனும் செய்ய வேண்டி இருந்தால், அதற்கு வக்ப் வாரியத்திடம் தடையில்லா சான்று பெற வேண்டுமா?
விஷயம் உண்மையாக இருந்தும், அதிகாரி தவறாக பதிவு செய்ததால், கிராம மக்கள் ஏன் அங்கு வருகிறார்கள், தங்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என வக்ப் வாரியத்தால் கூற முடியாதா?ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. ஏழை மக்கள் தலைமுறை தலைமுறையாக அங்கு வசிக்கும்போதும், அந்த நிலம் வேறு ஒருவருக்கு சொந்தமானது எனக் கூறிக் கொண்டே இருந்தார்கள். கோவிலின் நிலை என்ன? வக்ப் வாரியத்தால் கோவில் கட்டப்பட்டதா? இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.
கடந்த 2022ம் ஆண்டு திருச்சி ஜீயபுரம் அருகே உள்ள திருச்செந்துறை கிராமம் முழுதும் தமிழக வக்ப் வாரியம் தனக்கு சொந்தமானது எனக் கூறியது பிரச்னை ஆனது. இது குறித்து மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதனையடுத்து வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், கிராம மக்கள், வக்ப் வாரிய அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |