அனைத்து வீடுகளுக்கும் மின்சாரதை உறுதிசெய்யும் செளபாக்கியா யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது

செளபாக்கியா யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் என்பதை உறுதிசெய்யும் திட்டம் செளபாக்கியா யோஜனா திட்டம். தீன்தயாள் உபாத்யாயா வின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு செளபாக்கியா யோஜனா திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா பாரதிய ஜனசங்கத்தின் தலைவராக 1953 முதல் 1968 வரை பதவிவகித்தவர். அவருடைய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய அரசின் சார்பில் செளபாக்கியா யோஜனாதிட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தின் கீழ் 2018ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரவசதி அளிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

மேலும் ரூ.500 செலுத்தி மின்இணைப்பை பெறலாம்; 10 மாத தவணையில் தொகையை செலுத்தும் வசதியும் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. மண்ணெண்ணெய்க்கு மாற்று மற்றும் கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்டவைகளை ஒருங்கிணைத்து ஒரேதிட்டமாக செளபாக்கியா யோஜனா திட்டம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2011 சமுகபொருளாதார கணக்கெடுப்பின் படி பயனாளர்கள் கணக்கிடப் படுவார்கள். உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் அதிகாரிகள் உரியவர்களிடம் இருந்து விண்ணப் பங்களை பெறவேண்டும். மொத்த செலவினத்தில் 60% மத்திய அரசும், 10% மாநில அரசும் 30% கடனாகவும் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் 5 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைகுழுவை பிரதமர் அமைத்துள்ளார்.  பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை பிரதமருக்கு இந்தகுழு வழங்கும். ரூ.16,320 கோடி மதிப்பிலான புதிய திட்டத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக் ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மோடி “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள் – பிரதமர் மோடி அழைப்பு  'என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

மருத்துவ செய்திகள்

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...