நரேந்திர மோடிக்கு நிம்மதி தந்தது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

கடந்த 2002ல் நடந்த குல்பர்க் சொசைட்டி கலவர வழக்கை இனியும் விசாரிப்பதற்கு இல்லை. அது தொடர்பாக இனி எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. ஆமதாபாத் மாஜிஸ்திரேட் இவ்வழக்கு தொடர்பாக முடிவு எடுப்பார்’ என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், தொடர் குற்றச்சாட்டால் பல ஆண்டுகளாக சர்ச்சைக்குள்ளான மோடிக்கு நிம்மதி தரும் வகையில் தீர்ப்பு அமைந்தது.

கடந்த 2002 பிப்ரவரியில், குஜராத் மாநிலம் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ வைத்து எரிக்கப்பட்டதை அடுத்து, அங்கு கலவரம் பரவியது. இந்தக் கலவரத்தின் ஒரு பகுதியாக, குல்பர்க் சொசைட்டி பகுதியில் நடந்த வன்முறையில், காங்கிரஸ் எம்.பி., எசான் ஜாப்ரி உட்பட 69 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, குஜராத் வன்முறையை கட்டுப்படுத்த, முதல்வர் நரேந்திர மோடி மற்றும் 63 பேரும் தவறி விட்டதாகக் கூறி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கொல்லப்பட்ட எம்.பி.,யான ஜாப்ரியின் மனைவி ஜாகியா இந்த வழக்கை தொடர்ந்தார்.

கடந்த 2009 ஏப்ரல் 27ல் இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், “குல்பர்கா சொசைட்டி படுகொலை விசாரணையில் முன்னேற்றம் இல்லை’ என்று கூறி, சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. சி.பி.ஐ.,யின் முன்னாள் இயக்குனர் ராகவன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, “கோத்ரா ரயிலில் பயணம் செய்த கரசேவகர்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதால், இந்துக்கள் கலவரத்தில் இறங்கினர். கலவரம் தொடர்பாக முதல்வர் மோடிக்கு எதிராக நேரடியான ஆதாரங்கள் இல்லை’ என, அறிக்கை தாக்கல் செய்தது.

சீலிட்ட கவரில் சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கை தாக்கல் செய்ததும், அதை சுப்ரீம் கோர்ட்டிற்கு இந்த வழக்கில் உதவிய மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, அவரும், சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையையும், சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பரிசீலித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் ஜெயின், சதாசிவம், அப்டாப் ஆலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு

விவரம் வருமாறு:கடந்த 2002ல் குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்குகளில், சுப்ரீம் கோர்ட் இனி கண்காணிப்பும் மேற்கொள்ளத் தேவையில்லை. குஜராத் கலவரத்தை தடுக்க மோடி தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக, நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை. குல்பர்க் சொசைட்டி கலவரம் குறித்து விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு, தன் இறுதி அறிக்கையை கீழ்க்கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட ஆமதாபாத் மாஜிஸ்திரேட், முதல்வர் மோடி மற்றும் குஜராத் அரசின் உயர் அதிகாரிகள் உட்பட 63 பேர் மீது வழக்கு தொடர்வது தொடர்பாக உத்தரவுகள் பிறப்பித்தார். மோடிக்கும், மற்றவர்களுக்கும் எதிரான வழக்கை முடித்துக் கொள்ள மாஜிஸ்திரேட் முடிவு செய்தால், அதற்கு முன்னதாக, கொல்லப்பட்ட எம்.பி.,யான ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரியின் கருத்தை கேட்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் ராகவன், “”குஜராத் வன்முறை வழக்கில் கீழ்க்கோர்ட்டில் உண்மையை வெளிக்கொணரத் தேவையான நடவடிக்கைகளை எங்கள் குழு செய்யும். கீழ்க்கோர்ட்டின் வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம்,” என்றார். முதல்வர் மோடியோ, “கடவுள் பெரியவர்’ என, ஒரே வரியில் கருத்து கூறியுள்ளார்.திரும்பத் திரும்ப மோடியை இந்தக் கலவரத்துடன் தொடர்புபடுத்தி பெரிய அளவில் காங்கிரசும், அதற்கேற்ப மீடியாவும் பிரசாரம் செய்த நிலை மாறி, எட்டாண்டுகளுக்குப் பின் அவருக்கு நிம்மதி தரும் தீர்ப்பாக இது அமைந்திருக்கிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...