காமன்வெல்த் ஆஃப் டொமினிகா, தனது உயரிய தேசியவிருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
COVID-19 தொற்றின்போது, 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில், இந்தியா, டொமினிகாவுக்கு 70,000டோஸ் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை அன்பளிப்பாக வழங்கியது.
அத்துடன், டொமினிகாவின் சுகாதாரம், கல்வி மற்றும் தகவல்தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இந்தியா பல்வேறு உதவிகளை அளித்திருந்தது.
இந்த உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், டொமினிகா தனது நாட்டின் உயரியவிருதை பிரதமர் மோடிக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
டொமினிக்காவின் பிரதமர் வெளியிட்ட அறிக்கை;
இது தொடர்பாக, டொமினிகாவின் பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெர்ரிட் வெளியிட்ட அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி, டொமினிகாவின் உண்மையான நண்பர். கோவிட் தொற்றின்போது, சரியானநேரத்தில் அவர் நமக்கு உதவிசெய்தார். இதுவரையிலான அவரது ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், இருநாடுகளுக்கு இடையேயான உறவின் வலிமையை வெளிப்படுத்தும் விதமாகவும், நாங்கள் எங்கள் நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்க இருக்கின்றோம்” என்றார்.
மேலும், இருநாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுப்பட வேண்டும் என்று அவர் விரும்புவதாகவும், நவம்பர் 19 முதல் 21 வரை கயானாவின் ஜார்ஜ்டவுனில் நடைபெறும் இந்தியா-காரிகாம் உச்சி மாநாட்டின் போது காமன்வெல்த் தலைவர் டொமினிகா சில்வானி பர்ட்டன், இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |