அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி

” யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது கடமைகளைச் செய்கிறேன், ” என பிரதமர் மோடி கூறினார்.

சுப்ரீம் கோர்ட்டில் நடந்த அரசியலமைப்பு தின விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பு மற்றும் நாட்டின் தேவைக்கு ஏற்ப இந்திய அரசியலமைப்பு உள்ளது. காஷ்மீரில் அம்பேத்கரின் அரசியலமைப்பு அமல்படுத்தப்பட்டு உள்ளது. முதல்முறையாக அங்கு, அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இன்று இந்திய பெரிய அளவிலான மாற்றத்தை நோக்கி சென்று கொண்டு உள்ளது. அதற்கு இந்திய அரசியலமைப்பு நம்மை வழிநடத்துகிறது. நமக்கு ஒளிவிளக்காக திகழ்கிறது.

அரசியல் நிர்ணய சபை விவாதத்தின் போது ” அரசியலமைப்பு என்பது வெறும் வழக்கறிஞரின் ஆவணம் இல்லை” என்று அம்பேத்கர் கூறினார். இன்று இந்திய அரசியலமைப்பின் 75வது ஆண்டு. இது நாட்டின் பெருமைக்குரிய விஷயம். அரசியலமைப்புக்கும், அரசியலமைப்பு சபைகளுக்கும் நான் தலைவணங்குகிறேன்.

மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடந்த தினம் இன்று. அப்போது உயிரிழந்தவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். இந்தியாவின் பாதுகாப்புக்கு சவால்விடும் பயங்கரவாத அமைப்புகளுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்ற இந்தியாவின் தீர்மானத்தை மீண்டும் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.

நாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டதை பார்த்தோம். ஜனநாயகம் முன்பு எழுந்த சவாலை அரசியலமைப்பு எதிர்கொண்டது. இதுதுான் நமது அரசியலமைப்பின் பலம். காஷ்மீரில், அம்பேத்கரின் அரசியலமைப்பு முழுமையாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. முதல்முறையாக காஷ்மீரில் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

அரசியலமைப்பின் அசல் புத்தகத்தில் கடவுள் ராமர், சீதையின் உருவங்கள் அதில் உள்ளன. இந்த படங்கள் இந்திய கலாசாரத்தை பிரதிபடுத்துபவை. இவை எப்போதும் மனித மாண்புகளை நினைவுபடுத்துகிறது. இந்த மாண்புகளே இன்றைய இந்தியாவின் கொள்கை மற்றும் முடிவுகளுக்கு அடிப்படையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

திஹார் சிறையில் உள்ள கைதி வரைந்த ஓவியத்தை, பிரதமர் மோடிக்கு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா நினைவுப்பரிசாக வழங்கினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

மருத்துவ செய்திகள்

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...