இந்திய பொருளாதார மந்தநிலை தற்காலிகமானதே தவிர, அந்நாடு, ஜி.எஸ்.டி., அறிமுகம் காரணமாக, சிறப்பான வளர்ச்சி காணும்,’’ என, உலகவங்கி தலைவர், ஜிம் யங் கிம் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க தலைநகர், வாஷிங்டனில், பன்னாட்டுநிதியம் மற்றும் உலகவங்கியின் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கவந்த, ஜிம் யங் கிம், இந்தியா குறித்து, செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.
அதன் விபரம்: பிரதமர் மோடி, இந்தியாவின் வர்த்தகச் சூழலை மேம்படுத்த, தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதை, உலக வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது. மோடி எடுத்துவரும் நடவடிக்கைகள் அனைத்தும், நல்ல பயனை அளிக்கும் என, எதிர்பார்க்கிறோம். நடப்பு, 2017 – 18ம் நிதியாண்டின், ஏப்., – ஜூன் வரையிலான, முதல் காலாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 5.7 சதவீதமாக குறைந்துள்ளது.
இது, நாடுவளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கும்போது ஏற்பட்ட, சிறிய பிறழ்வு போன்ற போக்கு தான். ஜி.எஸ்.டி., அறிமுகத்தால், நாடு, தற்காலிக இடர்ப்பாடுகளை சந்தித்துள்ளது. இதன்விளைவாக, பொருளாதார வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., நாட்டின் பொருளாதாரத்தில், மிகப்பெரிய அளவில், சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால், வரும்மாதங்களில், பொருளாதார சுணக்கம் சரியாகி விடும்.
நடப்பு நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி ஸ்திரமாக இருக்கும். தனிப்பட்டமுறையில், என்னை பொறுத்த வரை, பிரதமர் மோடி, கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி, இந்தியமக்கள் அனைவரையும் முன்னேற்ற வேண்டும் என்பதில், உறுதியாக உள்ளார். ஆனால், இந்தியா ஏராளமான சவால்களை எதிர் நோக்கி உள்ளது. கல்வி, ஆரோக்கிய பராமரிப்பு துறைகளில், சற்றுமுன்னேற்றம் காணப்படுகிறது. எனினும், பெரும்பான்மை நாடுகளை போல, இத்துறைகளில், இந்தியா இன்னும் அதிக முன்னேற்றம் காண வேண்டும்.
:
பிரதமர் மோடி, அரசியல் கொள்கை மற்றும் உறுதிப்பாடு குறித்த தன்நிலையை, ஒவ்வொருவரிடமும் தெளிவாக வெளிப்படுத்தி உள்ளார். அவர், அதை எப்படி செயல்படுத்துகிறார் என்பதை, உலகவங்கி ஆராயும். அதன் அடிப்படையில், உலக வங்கி, எந்த அளவு முடியுமோ, அந்த அளவிற்கு, ஆக்கபூர்வமான பங்களிப்பை, இந்தியாவிற்கு விரைந்துவழங்கும்; இந்தியாவின் மனிதவள ஆற்றலை மேம்படுத்த துணைபுரியும்.
சுகாதார பிரச்னைகளுக்கு, மோடி அளித்துவரும் முக்கியத்துவம் பாராட்டத்தக்கது. அவரது தலைமையில், மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் ஒன்றான, ‘துாய்மை இந்தியா’ மிகச்சிறந்த திட்டமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.