கர்நாடக முதல்வர் சித்தராமையா நிலக்கரி ஒப்பந்தம் தொடர்பாக ரூ.450 கோடி வரை ஊழல் செய்திருப்பதாக கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான எடியூரப்பா குற்றஞ் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் எடியூரப்பா பேசியதாவது:
கர்நாடக மின் உற்பத்தி நிறுவனத்தின் தலைவராக முதல்வர் சித்தராமையா உள்ளார். அதில், தனியார் நிறுவனத் துடனான மின் உற்பத்தி ஒப்பந்தம் தொடர்பாக அவர் ஊழலில் ஈடு பட்டுள்ளார். இதற்கு மின்துறை அமைச்சர் டி.கே.ஷிவகுமார் உடந்தை யாக செயல்பட்டுள்ளார்.
தனியார் நிறுவனத் துடனான அந்த ஒப்பந்ததில் அவர் களின் சார்பாக அரசு மின் உற்பத்தி கழகத் துக்கு கர்நாடக அரசு சார்பாக ரூ.457 கோடி அளிக்கப் பட்டுள்ளது. இதனால் மக்களின் வரிப் பணம் வீணடிக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு தரப்பில் இருந்து இது வரை எவ்வித விளக்க மும் அளிக்கப் படவில்லை. இந்த விவகாரம் குறித்து முதல்வர் சித்தராமையா நிச்சயம் விளக்கம் அளிக்க வேண்டும். இதற்கு அவர் முழு பொறுப் பேற்க வேண்டும்.
இது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரிக்க உத்தர விட வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன். ஏனென்றால் இது மிகப்பெரிய ஊழலாகும். எனவே இது நிச்சயம் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றார்.
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.