கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது

நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பாஜக இழந்துள்ளது. இது மக்களின் தீர்ப்பு. இதை  ஆராய வேண்டியதில்லை. ஆனால் அகில இந்திய அளவில் இது எதிரொலிக்கும், சமாதி வச்சாச்சு. மோடியின் செல்வாக்கு சரிந்தது, என்றெல்லாம் எதிர்க்கச்சிகள்  ஆருடம் கூறுவது அவை குறித்து எழுத தூண்டுகிறது.

80 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட உத்திர பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களை வேண்டுமானால் கூறலாம். அத்தகைய மாநிலங்களின்  தேர்தல் முடிவுகள் அகில இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவல்லவை. அங்கெல்லாம் பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக அட்சியமைத்து வலுவாகவே உள்ளது. சமீபத்திய உள்ளாட்சிக்தேர்தலில் கூட மொத்தம் உள்ள 17 மாநகராட்சிகளிலும்  வெற்றி பெற்றுள்ளது.

28 பாராளுமன்ற தொகுதிகளை மட்டுமே கொண்ட கர்நாடக தேர்தல் வெற்றி  தோல்வியானது எப்படி அகில இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அதுவும் 1985 இல் இருந்து ஆளும் கட்சியினருக்கு இரண்டாவது முறையாக வாய்ப்பு தர மறுப்பவர்கள், லிங்காயத், ஒக்கலிகர், இஸ்லாமியர் என்று ஜாதி, மத ரீதியாக பிரிந்து, தங்களுக்கான சலுகைகளுக்காக மட்டுமே பெருவாரியாக  வாக்களிப்பவர்களின் முடிவுகள் எப்படி தேசத்தின் மனோநிலையாக இருக்க முடியும்.

காங்கிரசின் கர்நாடக வெற்றியானது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.,2000, 10 கிலோ அரிசி, பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, வீட்டுக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம், படித்த இளைஞர்களுக்கு மதம் 3000 போன்ற மாநில நிதிநிலையையே பதம்பார்க்க வல்ல காங்கிரசின் இலவச அறிவிப்புகள் சார்ந்தது.

மத்திய அரசின் மீதும், பாஜக ஆளும் மாநிலங்கள் எங்கிலும்  கண்டிராத ஊழல் குற்றச்சாட்டுகளாலும். பாஜக.,வின் முக்கிய ஒட்டு வங்கிகளில் ஒன்றான லிங்காயத் சமூகத்தை சேர்ந்த முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, ஈஸ்வரப்பா, முன்னாள் துணை முதல்வர் லக்ஷ்மான் சாத்திரி போன்றவர்களை தேர்தல் அரசியலில் இருந்து ஒதுக்கி  புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் பாஜக.,வின்  ஆபத்தான முயற்சியாலும்  விளைந்தது.

இதை போன்ற தலைமுறை மாற்றங்களை எல்லாம் காங்கிரசால் நினைத்து கூட பார்த்திட இயலாது. தனிப் பெரும்பான்மையுடன் மாநிலத்தில் வெற்றி பெற்றபோது கூட ஒரு முதல்வரை தேர்ந்தெடுக்க முடியாமல் சொந்த கட்சியினரிடமே பேரம் பேசுபவர்கள் இவர்கள் . இதை நாம் கர்நாடகத்தில் சித்தாராமையா , டி.கே சிவகுமார் வடிவிலும், ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் வடிவிலும் காணலாம். இவை இரண்டிலுமே முந்தையவர் பிந்தையவருக்கு வயதாகியும் வழிவிட மறுப்பதே பிரச்சனை. இவையும் காங்கிரசின் பலவீனம்.

இத்தகையவர்கள் எப்படி மோடியின் முன் நிற்க முடியும். முற்றிலும் மாறுபட்ட எண்ணம் கொண்ட கர்நாடக வாக்காளர்கள் எப்படி இந்தியாவின் மனோநிலையாக மாற முடியும். ஆனால் ஒருவிதத்தில் முடியும் கர்நாடகத்தில் ஆட்சியமைப்பவர்கள், மத்தியில்  ஆட்சிக்கு வருவதில்லை என்ற வரலாறு உண்டு. அந்த விதத்தில் வேண்டுமானால் ஆகலாம்.

நன்றி;- தமிழ்தாமரை வி.எம் வெங்கடேஷ் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...