பிரதமர் நரேந்திரமோடி எனும் பிராண்ட் இல்லாமல் போனால் குஜராத்திலும் பாஜக மண்ணைத்தான் கவ்வும் என்பதைத்தான் டைம்ஸ்நவ்-விஎம்ஆர் கருத்து கணிப்புகள் உறுதிப்படுத்துகின்றன.
குஜராத் சட்ட சபை தேர்தல்கள் டிசம்பர் 9,14 தேதிகளில் நடைபெற உள்ளன. டிசம்பர் 18-ந் தேதி யன்று வாக்குகள் எண்ணப் படுகின்றன. குஜராத் தேர்தல்முடிவுகள் எப்படியாக இருக்கும் என்பது தொடர்பான கருத்துகணிப்புகள் நேற்று முதல் வெளியிடப்பட்டு வருகின்றன. இன்று டைம்ஸ் நவ்-விஎம்ஆர் இணைந்து கருத்துகணிப்புகளை வெளியிட்டன.
இதில், பிரதமர் மோடி மண்ணின் மைந்தர் என்பதற் காகவே பாஜக.,வை ஆதரிப்பதாக 81% பேர் கூறியுள்ளனர். கடந்த 2012-ம் ஆண்டு தேர்தலில் மோடி மண்ணின் மைந்தர் என்பதற்காக ஆதரித்தவர்கள் 60% பேர்தான்.
அதேபோல் என்னதான் பிரதமர் பதவியில் மோடி அமர்ந்திரு ந்தாலும் கடந்த 5 ஆண்டுகளில் குஜராத்தின் சிறந்தமுதல்வராக 67% மோடியைத் தான் கருதுகின்றனர்.
இது தொடர்பாக கருத்துதெரிவித்துள்ள அரசியல் பார்வை யாளர்கள், பொதுவாக மாநிலங்களில் நீண்டகாலம் ஒருகட்சி ஆட்சியில் இருந்தால் ஆட்சிக்கு எதிராகவே மக்கல் வாக்களிப்பார்கள். ஆனால் குஜராத்தில் தொடர்ந்து பாஜக வெல்வதற்கு காரணம் நரேந்திரமோடி எனும் முத்திரைதான்.
பிரதமர் நரேந்திரமோடி என்கிற பிராண்டட் முத்திரை இல்லாமல் இருந்தால் நிச்சயம் குஜராத்திலும் பாஜக மண்ணைத் தான் கவ்வும். இதில் எந்த ஒருசந்தேகமுமே இல்லை என்றே வாதிடுகின்றனர்.
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.