காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்கட்டணி அரசே, திட்டமிட்டு சட்டப்படி நாட்டைக் கொள்ளை அடித்தது. காங்கிரஸ்கூட்டணி அரசு இப்படி திட்டமிட்டு கொள்ளை அடித்ததால்தான், இன்று பலர் முன்ஜாமீன், ஜாமீன் பெற்றும், சிலர் சிறையில் இருந்தும் நீதிமன்றத்துக்குச் சென்று வருகின்றனர்.
கருப்புப் பணத்துக்கு எதிரான போராட்டம் தொடரும்: ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் திட்டமிட்டே பாஜக மீது அவதூறு பரப்பிவருகின்றன. கருப்புப் பணத்துக்கு எதிராக பாஜக தொடர்ந்து போராடும். நாங்கள் ஆட்சியில் இல்லாதபோதே கருப்புப் பணத்தை ஒழிக்க குரல் கொடுத்தோம். குறிப்பாக மூத்த தலைவர் அத்வானி, 90 வயதை நெருங்கிய நிலையிலும் கருப்புப்பணத்துக்கு எதிராக நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டார்.
தற்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தபின்னர் கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்தோம். குறிப்பாக, வரி ஏய்ப்பு செய்ய நினைப்பவர்களுக்கு எதிரான நடவடிக்கை தொடரும். இதற்கு மக்கள் ஒத்துழைக்க ண்டும். குறிப்பாக, கருப்புப்பண விவகாரத்தில் அரசுக்கு ஆடிட்டர்கள் உதவி புரியவேண்டும்.
.நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவே பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்தியஅரசு எடுத்தது. வெளிநாட்டில் பதுக்கப்பட்ட கருப்புப்பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவரும் முயற்சியே உயர் ரூபாய் நோட்டுகளின் மதிப்பு நீக்கம்.
கருப்புப்பணப் புழக்கம் குறைந்துள்ளது: ரியல் எஸ்டேட் துறையில் அதிகளவு இருந்த கருப்புப்பணப் புழக்கம் குறைந்துள்ளது. ஏழைமக்களின் வீடு வாங்கும் கனவு இப்போது நிறைவேறி வருகிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை முக்கியமான முயற்சி. முன் கூட்டியே அறிவித்திருந்தால் பணத்தை பதுக்கிய வர்கள் சிக்கியிருக்க மாட்டார்கள். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு வங்கிக்கு வந்த அனைத்துப்பணமும் வெள்ளை அல்ல; அதில் கருப்புப் பணமும் இருந்தது. அதுகுறித்து விசாரித்து பலர் மீது நடவடிக்கை எடுத்திரு க்கிறோம்
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது.
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
Leave a Reply
You must be logged in to post a comment.