தமிழுக்கும், சைவத்துக்கும் பெரும்தொண்டாற்றி வரும் தருமபுரம் ஆதீனத்தின் விழாவில் பங்கேற்பதற்காக, தமிழகஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள், திருக்கடையூரில் இருந்து தருமபுரம் ஆதினத்திற்கு காரில்சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆளுநர் பயணித்தகாரின் மீதும், உடன் சென்றவாகனங்கள் மீதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் கருப்புக்கொடி, தண்ணீர் பாட்டில்கள், கற்கள் வீசி தாக்கியுள்ளனர். இது கடும்கண்டனத்துக் குரியது.
அரசியல மைப்பு சட்டப்படி, தமிழக அரசு நிர்வாகத்தின் தலைவரான ஆளுநருக்கே பாதுகாப்பற்ற சூழல் தமிழகத்தில் உருவாகி இருப்பது பெரும் கவலை அளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு எந்தஅளவுக்கு சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு, இந்தச் சம்பவமே சிறந்த உதாரணம்.
தங்களின் விருப்பப்படி ஆளுநர் செயல்படவில்லை என்பதற்காக, அவருக்கு எதிரான மனநிலையை உருவாக்கும் வகையில் திமுகவினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘முரசொலி’யில் ஆளுநரைப்பற்றி அவதூறு பரப்பி வருகின்றனர். முன்னாள் பிரதமர் திருமதி இந்திராகாந்தி மீது மதுரையில் தாக்குதல் நடத்தியவர்கள் திமுகவினர். இதுபோல திமுகவின் கடந்தகால வரலாறுகளை பார்க்கும்போது தமிழக ஆளுநர் மீதான இந்தத் தாக்குதல் திட்டமிட்ட ரீதியில் நடந்திருப்பதாக சந்தேகம் எழுகிறது.
எனவே, இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது. ஆளுநர் சென்ற கார் மீதும், உடன் சென்ற வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியவர்களை கைதுசெய்து, சட்டப்படி உரிய தண்டனை வழங்க வேண்டும். இதற்கு பின்னணியில் இருந்தவர்களையும் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், “ஆளுநருக்கும் எனக்கும் தனிப்பட்ட பகை எதுவும் இல்லை” என்ற முதலமைச்சரின் கூற்று உண்மையாகும். நடவடிக்கை எடுப்பீர்களா முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே….!
நன்றி வானதி சீனிவாசன்
பாஜக தேசிய தலைவர் மகளீர் அணி
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |