அனைத்து வகை பருப்புகளுக்கு இருந்த ஏற்றுமதிக்கான தடையை நீக்கியி ருப்பதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
மத்திய அமசை்சரவை கூட்டம் இன்றுநடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் கூறியதாவது:
இன்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் மத்திய அமைச்சரவையில் கீழ்கண்ட முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கபட்டது.
பிரதமர் வீடுவழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வீடுகளுக்கு 90 சதுர கன அடி பரப்பில் இருந்து 120 சதுர கன அடியாக உயர்த்தவும், ஜி.எஸ்.டி., யில் விலை குறைக்கப்பட்ட பொருளின் விற்பனையை கண்காணிக்க லாபமீட்பு தடுப்பு தேசிய கண்காணிப்பு ஆணையம் ( என்.ஏ.ஏ., ) அமைக்கவும், அங்கன்வாடி உள்ளிட்ட ஒருங்கினைந்த குழந்தைகள் நலதிட்டம் நீட்டிக்கவும், முடிவு செய்யப்பட்டது.
இந்த குழந்தைகள் திட்டத்தில் 11கோடி குழந்தைகள், கர்ப்பிணிகள் பயன்பெறுவர். நீதி மன்றங்களின் பராமரிப்பு மற்றும் பணியிடம்நிரப்புதல், குடியிருப்புகள் கட்டுதல் வகைக்கு ரூ. 3, 320 கோடி ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.