திருப்பதி- காட்பாடி இடையே 104 கி.மீ., தூரத்துக்கு இரட்டை ரயில் பாதை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: திருப்பதி – பகாலா – காட்பாடி இடையிலான சுமார் 104 கி.மீ., தொலைவுள்ள ஒற்றை ரயில் பாதையை, இரட்டை ரயில் பாதையாக மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.1,332 கோடி செலவில் ஆந்திரா மற்றும் தமிழகம் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் 400 கிராமங்கள், 14 லட்சம் மக்கள் பயன்பெற இருக்கிறார்கள். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கான இணைப்பு மேம்படுவதோடு, ஆண்டுக்கு 4 மில்லியன் டன் கூடுதல் சரக்கு போக்குவரத்து நடக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதேபோல், பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு கொள்கை ரீதியில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு வெளியிட்டுள்ள அறிக்கை:
பரந்தூர் விமான நிலையத்திற்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் கொள்கை ரீதியான ஒப்புதலை வழங்கியுள்ளது என்பதை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், நாடு முழுவதும், குறிப்பாக டில்லி, மும்பை மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் இரண்டாவது விமான நிலையங்களை உருவாக்குவதன் மூலம், பயணிகள் தேவைக்கு தீர்வு காண முடியும்.
தமிழகத்தின் விமான உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |