அயோத்திக்கு பதிலாக லக்னோவில் மசூதிகட்ட விருப்பம் தெரிவித்து உத்தரபிரதேச ஷியாபிரிவு முஸ்லிம் வக்பு வாரியம் மற்றும் இந்து சாமியார்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பரிந்துரை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதியின் உரிமைதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், இந்தபிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண் பதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
இந்த பிரச்சினையை கோர்ட்டுக்கு வெளியே தீர்த்துக் கொள்ளும் நோக்கில் உத்தர பிரதேசத்தின் ஷியா பிரிவு முஸ்லிம் வக்புவாரியமும், இந்து அமைப்பினர் மற்றும் சாமியார்களும் இணைந்து உடன்பாடு ஒன்றை எட்டியுள்ளனர். இதுதொடர்பாக 5 அம்ச பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 18-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது.
4 பக்கங்களை கொண்ட இந்த பரிந்துரைக்கு இந்து சாமியார்கள் மகந்த் தரம் தாஸ் (அயோத்தி வழக்கில் ஒரு மனுதாரர்), மகந்த் ராம்தாஸ், மகந்த் சுரேஷ் தாஸ் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ராம்விலாஸ்தாஸ் வேதாந்தி உள்ளிட்டவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
இந்த பரிந்துரைகளை வக்பு வாரிய தலைவர் வசீம் ரிஸ்வி நேற்று செய்தியாளர்களிடம் வெளியிட்டார். அதில் முக்கியமாக அயோத்தியில் பாபர் மசூதி தேவையில்லை என்றும், அங்கு ராமர் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது. பாபர் மசூதிக்கு பதிலாக லக்னோவின் உசேனாபாத்தில் மசூதிஒன்று கட்டி, அதற்கு மஸ்ஜித்-இ-அமான் என பெயரிட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
மேலும் பாபர்மசூதியில் தங்களுக்கு உள்ள உரிமையை வக்பு வாரியம் திரும்ப பெறுகிறது எனவும், புதிய மசூதிக்கு நிலம் ஒதுக்கித்தரும்படி மாநில அரசுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து வசீம் ரிஸ்வி கூறுகையில், ‘அயோத்தி, கோவில்கள் நிறைந்த ஒரு பகுதி. அங்கு மசூதி தேவையில்லை. ஆனால் உசேனாபாத்தில் மசூதிகட்ட முடியும். இதற்காக 1 ஏக்கர் நிலம் நிலம் ஒதுக்குமாறு அரசை நாங்கள் கேட்டுக்கொள்வோம். பின்னர் மக்களிடம் நிதிவசூலித்து மசூதி எழுப்புவோம்’ என்றார்.
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.