சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கு தனி செல்வாக்கு இருப்பது போன்று பில்டப் கொடுத்த தேமுதிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தனியாக நிற்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன, உருவபொம்மையை எரித்து, போராட்டம் நடத்தி தொகுதிகளை கேட்டுவாங்கிய தேமுதிக, தற்போது உள்ளாட்சி தேர்தலில் அதிமு கவை எதிர்த்து வாய்திறக்க முடியவில்லை.
இதனால் வேறு வழியில்லாமல் உள்ளாட்சி தேர்தலில் தனித்துபோட்டியிட போவதாக தேமுதிக அறிவித்துள்ளது.
இதை தொடர்ந்து தேமுதிகவின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் அக் கட்சி தலைவர் விஜயகாந்த் வெளியிட்டு உள்ளார். அதில் 9மாநகராட்சிகளுக்கான மேயர்பட்டியல் வெளியிடபட்டுள்ளது.
சென்னை மேயர் வேட்பாளர் – கோ.வேல்முருகன்
கோயம்புத்தூர்மேயர் வேட்பாளர் – ஆர்.பாண்டியன்.
மதுரை மேயர் வேட்பாளர் – கா. கவியரசு
சேலம் மேயர் வேட்பாளர் – ஏ.ஆர். இளங்கோவன்.
வேலூர் மேயர் வேட்பாளர் – எஸ்.சத்தியவாணி சுரேஷ்பாபு
திருநெல்வேலி மேயர் வேட்பாளர் – ஏ.சீதாலட்சுமி
ஈரோடு மேயர் வேட்பாளர் – என்எஸ் சிவக்குமார்
திருப்பூர் மேயர் வேட்பாளர் – என்.தினேஷ்குமார்
தூத்துக்குடி மேயர் வேட்பாளர் – எஸ்.ராஜேஷ்வரி
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.