நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது

மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக சட்ட வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதி பாஜக வேட்பாளர் அம்ரிதா ராயுடன் பிரதமர் நரேந்திரமோடி நேற்று தொலைபேசி மூலம் பேசினார். அப்போது அவர், “ஏழைகளிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தையும் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்ட சொத்துகளையும் திரும்பப் பெறுவதற்கான சட்டவாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறேன்.

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ள அதேவேளையில் ஊழல் வாதிகள் அனைவரும் தங்களை காப்பாற்றிக்கொள்ள கைகோத்துள்ளனர். மேற்குவங்க மக்கள் மாற்றத்துக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

பிரதமர் மோடி தொலை பேசியில் பேசிய இரண்டாவது பாஜக வேட்பாளர் அம்ரிதா ராய் ஆவார். இவரது கிருஷ்ணா நகர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில், எம்.பி. பதவியில் இருந்து நீக்கப்பட்ட மஹுவா மொய்த்ரா போட்டியிடுவதால் இத்தொகுதி கவனம்பெற்றுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க் கிழமை மேற்கு வங்கத்தின் பசீர்ஹட் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ரேகாபத்ராவுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது ‘நீங்கள் சக்தியின்சொரூபம்’ என்று அவரை பாராட்டினார்.

சந்தேஷ்காலியில் திரிணமூல் காங்கிரஸ் உள்ளூர் தலைவர் ஷாஜகான்ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகளின் அட்டூழியங்களுக்கு எதிராககுரல் எழுப்புவதில் ரேகா முக்கியப்பங்கு வகித்தார்.

பசீர்ஹட் மக்களவைத் தொகுதியின்கீழ் உள்ள கிராமத்தை சேர்ந்த ரேகா பத்ராவை, அத்தொகுதி வேட்பாளராக பாஜக நிறுத்தியுள்ளது.

கடந்த மார்ச் 6-ம் தேதி பராசத்நகரில் பிரதமர் நரேந்திரமோடியின் பொதுக்கூட்டத்துக்கு இடையில் பிரதமரை சந்தித்து சந்தேஷ்காலி பெண்களின் துயரத்தை பிரதமரிடம் விவரித்தபெண்கள் குழுவில் ரேகா பத்ராவும் இடம்பெற்றிருந்தார்.

வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலியில் ஷாஜகான் ஷேக் மற்றும் அவரதுகூட்டாளிகள் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன.

இவர்களின் நிலஅபகரிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத் தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...