மத்திய சுற்றுலா மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் அல்ஃபோன்ஸ் கண்ணந்தானம் தமக்கு அளிக்கப்பட்ட 'ஒய்' பிரிவு பாதுகாப்பை நிராகரித்துவிட்டார்.
இதுகுறித்து மத்திய சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: தமக்கு கூடுதல்பாதுகாப்பு தேவையில்லை என்று அமைச்சர் தெரிவித்து விட்டார். அப்படி கூடுதல்பாதுகாப்பு அளிப்பது, அரசுப் பணத்தை வீணடிக்கும்செயல் என்று அவர் கூறிவிட்டார்.
இதுபோன்ற விவகாரங்களில், மத்திய அமைச்சர் அல்ஃபோன்ஸ் தெளிவாக இருக்கிறார். ரயில், விமான பயணங்களில் சாதாரணவகுப்பில் பயணிப்பதையே அவர் விரும்புகிறார். உயர்வகுப்பு பயணத்தை அமைச்சர் விரும்புவCதில்லை. அதேபோல், சுற்றுப்பயணம் செல்கையில், அரசு விடுதிகள்தவிர்த்து, வேறு எங்கும் அமைச்சர் அல்ஃபோன்ஸ் தங்குவதில்லை. தனிப்பட்ட பயணத்துக்கு தனது காரை பயன்படுத்துகிறார்; அரசு வாகனத்தைப் பயன்படுத்துவதில்லை.
அமைச்சர் அல்ஃபோன்ஸுக்கு சொந்தமான பங்களா பழுதடைத்திருந்தது. அப்போது அரசுக்குச் சொந்தமான அசோகாஹோட்டலில் தங்கவில்லை. தில்லியில் உள்ள கேரள இல்லத்திலேயே தங்கினார். தனது அமைச்சக அலுவலக அதிகாரிகளை ஞாயிற்றுக்Cகிழமைகளில் வேலைகளில் ஈடுபடுமாறும் அவர் கோருவதில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, மத்திய சுற்றுலா துறை அமைச்சகத்துக்கு கடந்த 25-ம் தேதியன்று அமைச்சர் அல்ஃபோன்ஸ் தனது சொந்த வாகனத்தை ஓட்டிச்சென்றார். அப்போது அமைச்சகத்தின் நுழைவு வாயிலில் இருந்த தொழிலக பாதுகாப்புப்படை வீரர்கள், அந்த வாகனத்தை உள்ளே அனுமதிக்கவில்லை. அவர் கேரளத்துக்கு அண்மையில் சென்றபோது, ஆட்டோவில் பயணித்தது குறிப்பிடத்தக்கது.
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.