குல்பூஷண் ஜாதவை, அவரது குடும்பத்தினர் சந்திக்க அனுமதி த்ததை தனது பிரச்சாரத்திற்கு பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்வதாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மாஸ்வராஜ் மாநிலங்களவையில் கண்டனம் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் குல்பூஷண் ஜாதவை, அவரது தாய் அவந்தி, மனைவி சேத்தன்குல் ஆகிய இருவரும் இஸ்லாமாபாத் சென்றுசந்தித்தனர். ஜாதவை கண்ணாடி திரைக்குவெளியில் இருந்தபடி சந்தித்த அவர்கள் பின்னர் இந்தியா திரும்பினர்.
குல்பூஷண் ஜாதவை சந்திக்கசென்ற அவரது குடும்பத்தினர் துன்புறுத்தப் பட்டதாகவும், அவரது மனைவியின் வளையல், தாலியை பறித்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அவரதுஷூவை பறித்து கொண்ட தாகவும் கூறப்படுகிறது.
இதற்கு இந்தியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனை பாகிஸ்தான் மறுத்துள்ளது. இந்நிலையில் குல்பூஷண் விவகாரம் தொடர்பாக மாநிலங் களவையில் இன்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
‘‘குல்பூஷண் ஜாதவிற்கு பாகிஸ்தான் விதித்த மரணதண்டனையை, சர்வதேச நீதிமன்றத்தை அணுகி இந்தியா தடுத்துள்ளது. குல்பூஷண் ஜாதவை சந்திப்பதற்காக அங்குசென்ற அவரது மனைவி மற்றும் தாயின் ஆடைகளை பாதுகாப்பு காரணங்களுக்காக எனக்கூறி மாற்றுமாறு பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியுள்ளனர். தாலி மற்றும் நகைகளை வாங்கியுள்ளனர். ஜாதவ் குடும்பத்தினர் ஊடகத்தினரை சந்திக்கக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக பாகிஸ்தான் ஊடகங்கள் அவர்களை படம் எடுக்க அனுமதிக்கப்பட்டது. இதன் மூலம் குல்பூஷண் ஜாதவை, அவரது குடும்பத்தினர் சந்திக்க அனுமதித்ததை தனது பிரச்சாரத்திற்கு பாகிஸ்தான் பயன்படுத்தி கொள்வது தெளிவாகிறது.
குல்பூஷண் ஜாதவ் குடும்பத்தினர் மீதான மனிதஉரிமை மீறல்களுக்கு அனைவரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்யவேண்டும். குல்பூஷண் ஜாதவை விடுவித்து இந்தியா அழைத்துவர அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும். சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்தமுயற்சியில் வெற்றி பெறுவோம்’’ எனக் கூறினார்.
இதைத் தொடர்ந்து மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசுகையில் ‘‘நம் நாட்டு பெண்களை மிக மோசமாக நடத்திய பாகிஸ்தானின் செயலை ஏற்க முடியாது. நாம் ஒன்றுபட்டு பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்’’ எனக்கூறினார்.
இதைதொடர்ந்து மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு பேசுகையில் ‘‘குல்பூஷண் ஜாதவை பத்திரமாகமீட்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என இந்த அவை கேட்டுக்கொள்கிறது. பாகிஸ்தானின் செயலுக்கு சர்வதேச சமூகம் கண்டனத்தை தெரிவிக்கவேண்டும்’’ எனக்கூறினார்.
யார் இந்த குல்பூஷண்..
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவ் (47) ஈரானின் சாபஹர் துறைமுகத்தில் வர்த்தகம் செய்துவந்த அவரை பாகிஸ்தான் உளவுத் துறையினர் கைதுசெய்தனர். உளவு பார்த்ததாகக் கூறி அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் அவருக்கு மரணதண்டனை விதித்தது.
இதை எதிர்த்து இந்தியா சார்பில் தாக்கல்செய்த மனுவை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவின் மரண தண்டனையை நிறுத்திவைக்க உத்தர விட்டது. இந்தவழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில் சர்வதேசநிர்பந்தம் காரணமாக ஜாதவை சந்தித்துப்பேச அவரது தாய், மனைவிக்கு பாகிஸ்தான் விசா வழங்கியது. இதை ஏற்று இருவரும் பாகிஸ்தான் சென்று ஜாதவை சந்தித்துவிட்டு திரும்பினர்.
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
Leave a Reply
You must be logged in to post a comment.