நாடுகளுக்கு இடையே சர்வதேசளவில் வர்த்தக உறவுகள் வேண்டும் என்று டாவோஸ் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடிக்கு சீனா பாராட்டு தெரிவித் துள்ளது.
உலகப்பொருளாதார அமைப்பின் மாநாட்டு, ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் செவ்வாய்க் கிழமை தொடங்கியது. இந்தமாநாட்டில், 70 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். உலகவங்கி, சர்வதேச செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்.), உலகவர்த்தக அமைப்பு (டபிள்யூ.டி.ஓ.) ஆகியவற்றின் தலைவர்களும், பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், 'பல நாடுகள் தங்கள் உள்நாட்டு தொழில் துறையைப் பாதுகாக்கிறோம் என்றபெயரில், வெளிநாடுகளுடன் வர்த்தகத் தொடர்பின்றி உள்ளன; இது, பயங்கரவாதம், பருவ நிலை மாற்றம் ஆகியவற்றைப் போல் மிகவும் அபாயகரமானது'' என்றார்.
மோடியின் இந்த உரையை வரவேற்று, சீனாவில் 'குளோபல் டைம்ஸ்' போன்ற நாளிதழ்கள், முதல்பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், மோடியின் உரைக்கு சீனவெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஹுவா சன்யிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் புதன் கிழமை மேலும் கூறியதாவது: வளரும் நாடுகள் உள்பட அனைத்து நாடுகளும் பயன்பெற வேண்டுமெனில் தாராள மயமாக்கல் நடவடிக்கையை ஊக்குவிக்க வேண்டியது அவசியம் என்று மோடி தனது உரையில் வலியுறுத்தினார். வெளிநாடுகளுடனான வர்த்தக உறவுகளைத்தடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடவேண்டும் என்றும் அவர் கூறினார்.
உலகப் பொருளாதார வளர்ச்சிக்காகவும், அனைத்து நாடுகளும் பயன் பெறுவதற் காகவும், சர்வதேச தாரள மயமாக்கல் நடவடிக்கையை வலுப்படுத்த இந்தியா உள்பட அனைத்து நாடுகளுடன் இணைந்து செயல் படுவதற்கு சீனா தயாராக உள்ளது. இதேகருத்தை, முந்தைய ஆண்டுகளில் டாவோஸ் மாநாட்டில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் வலியுறுத்தினார்.
சீனாவின் மிகப் பெரிய அண்டை நாடான இந்தியாவுடன் கருத்து வேறுபாடுகளை களைந்து, பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தி, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்று சீனா விரும்புகிறது. இது, இருநாட்டு மக்களின் விருப்பம் என்றார்.
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.