உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள இந்தியா, சர்வதேச அளவில் 3வது பெரிய உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையை கொண்டுள்ளது என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறினார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-க்ளோஸ்டர்ஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் 55வது ஆண்டு கூட்டத்தில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு பங்கேற்றுள்ளார்.
டாவோஸில் ராம் மோகன் நாயுடு அளித்த பேட்டி:
இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து வளர்ந்து வருகிறது. உலகிலேயே மூன்றாவது பெரிய உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையாக நாம் இருக்கிறோம். அந்த அளவுக்கு விமான பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எனவே அந்த ஆற்றலுடன், இந்தியாவிற்கு அதன் சொந்த பெரிய விமானப் போக்குவரத்து மையம் இருக்க வேண்டும்.
டில்லி நாட்டின் பல்வேறு உள்நாட்டு விமான நிலையங்களுடன் இணைப்பைப் பெற்றுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கு ஒரு போக்குவரத்து மையமாகவும் செயல்படும் திறனை கொண்டிருக்கிறது.
மேலும் இரண்டு ஆண்டுகளுக்குள் டில்லியை ஒரு பெரிய சர்வதேச விமானப் போக்குவரத்து மையமாக நிறுவ விரும்பும் திட்டம் எங்களிடம் உள்ளது. பல்வேறு விமான நிறுவனங்களுடனும் நாங்கள் பேசி வருகிறோம்.
இவ்வாறு ராம் மோகன் நாயுடு கூறினார்.
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |