இந்தியாவின் ஆன்மிக அடையாளங்களில் ஒன்றாக அறியப்படும் கங்கைநதியின் தற்போதைய நிலைமை அனைவரும் அறிந்ததே! நதியைச் சுத்தம்செய்து, பழைய நிலைக்குக் கொண்டுசெல்ல நிறுவப்பட்ட திட்டமே நமாமி கங்கைத்திட்டம் (Namami Gange Programme). இதன் தற்போதைய நிலையை மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்காரி பகிர்ந்து கொண்டார். அதன்படி, 2019-ம் ஆண்டுக்குள், 80% கங்கை நதி சுத்தம் செய்யப்படும் என்று தெரிவித்தார். முதற்கட்டமாக, கங்கை நதிக்கு மாசு ஏற்படுத்தும் முதல் 10 நகரங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், இதில் கான்பூர் நகரத்துக்குத் தான் முதலிடம் என்றும் விளக்கினார்.
“உத்தரப் பிரதேச அரசிடம் சிலகோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். இதன்படி சர்க்கரை ஆலைகள், காகிதத் தொழிற்சாலைகள் மற்றும் பிற தொழில்துறை வளாகங்களில் இருந்துவரும் கழிவுகள் கங்கை நதிக்குள் சென்று கலக்கக்கூடாது. இத்தகைய கழிவு நீர் கலப்புதான் கங்கையின் தற்போதைய நிலைக்கு மிகமுக்கிய காரணம். இந்த நமாமிகங்கை திட்டம் சற்றேசவாலான திட்டம்தான். கங்கை நதி பலநகரங்களைத் தொட்டுச் செல்வதால், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையில் மாசு இருக்கிறது. இதைச் சரிசெய்ய, நாம் கொண்டு வந்துள்ள திட்டங்கள் அனைத்தும் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பானில் நிலவும் ஆற்று மாசுபாடு குறைப்பு நடவடிக்கைகள் குறித்து நன்கு ஆராய்ந்தபின்னரே வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தத்திட்டத்துக்காக பிரத்தியேகமாக 2,200 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்பம் கொண்டே இந்தத்திட்டம் உயிர்பெற்றுள்ளது” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.