மத்திய பட்ஜெட்டில் வரிவிதிப்பில் தனிநபர்களுக்கான வருமானவரி வரம்பில் சலுகை, வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான அம்சங்கள், விவசாய கடன் தள்ளுபடிக்கான அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப் படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முழுமையான கடைசி பட்ஜெட்டை வியாழக்கிழமை காலையில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி சமர்ப்பிக்க இருக்கிறார். கடந்த 2005 – 2006 ஆம் ஆண்டுடன் கைவிடப்பட்ட தனி நபர்களுக்கு நிலையான வரிவிதிக்கும் நடைமுறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. தனிநபர் வருமானவரி வரம்பு தற்போது உள்ள இரண்டரை லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்பும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருமானவரி விலக்குக்குரிய மருத்துவச் செலவுத்தொகை தற்போதுள்ள 15 ஆயிரம் ரூபாய் என்ற வரம்பில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி தற்போதுள்ள 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்படக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயத்தை மேம்படுத்துவதற்கென உத்தரவாதத்துடன் கடன் வழங்குவதற்கான நிதியை அதிகரிக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
விவசாயிகளின் சுமையை போக்கும் வகையில் குறிப்பிட்ட அளவிலான கடன் தள்ளுபடி, பயிர்க் காப்பீடுத் திட்டங்களுக்கான தொகையை அதிகரித்தல் போன்ற அறிவிப்புகளைச் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. சிறு, குறு நீராதார திட்டங்கள், புதிய அணைகள், கால்வாய்கள் குறித்த அறிவிப்புகளும் இடம் பெற வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. விவசாய உற்பத்திப் பொருள்களை இருப்பு வைப்பதற்கான குளிர்பதன கிடங்குகளை அதிகரித்தல், உரமானியம் போன்ற அறிவிப்புகளும் இடம்பெறக்கூடும் எனத் தெரிகிறது.
டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறையை ஊக்குவிக்கும் வகையில் சலுகைகள் அறிவிக்கப்பட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொலைத் தொடர்பு சேவைக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் எதிர்பார்க்கப் படுகிறது. ரியல் எஸ்டேட்டுக்கான ஜிஎஸ்டி வரி தற்போது நிர்ணயிக்கப் பட்டுள்ள 12 சதவீதத்தில் இருந்து மேலும் குறைக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.
இயற்கை எரிவாயுவுக்கான ஜிஎஸ்டியை குறைக்கவும் மத்திய அரசு உத்தேசித்துள்ளதாக கூறப்படுவதால், சமையல்சிலிண்டரின் விலையில் மாற்றமிருக்கலாம் எனத்தெரிகிறது. தங்க இறக்குமதிக்கான வரியை 10 சதவீதத்தில் இருந்து 2.4 சதவீதமாக குறைத்து அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.