பிப்.1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
பார்லி. கூட்டத்தொடர் வரும் ஜன.31ம் தேதி தொடங்கி பிப்.13ம் தேதி வரை நடக்கிறது. அந்த கூட்டத்தொடரின் போது பிப்.1ம் தேதி 2025க்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியில் பா.ஜ., தலைமையிலான அரசின் ஆட்சியில் 3வது முறையாக முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் தொடர்பாக தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினருடன் அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு மாதம் ஆலோசனை நடத்தி அவர்களின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இந்த முறை வரிமுறையை எளிமைப்படுத்துதல், முதலீடு மற்றும் அதனை சார்ந்த வளர்ச்சி குறித்த பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக சனி மற்றும் ஞாயிறுகளில் பங்குச் சந்தைகள் விடுமுறை. இந்த முறை பிப்.1ம் தேதி சனிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ஆகையால் அன்றைய தினம் பங்குச் சந்தைகள் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |