குஜராத் சட்டமன்றத் தேர்தலில் கடும்போட்டிக்கு இடையே பாரதீய ஜனதா வெற்றி பெற்ற போது ஆந்திர பிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சியினர் எழுப்பிய கோஷமானது கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சியினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. தனியாகவே தேர்தலை சந்திப்போம் என பாரதீய ஜனதாவினர் பேசியதும் இரு கட்சிகளுக்கு இடையே விரிசல் தொடங்கிவிட்டது எனவும் செய்திகள்வெளியாகியது. இதற்கிடையே பாரதீய ஜனதாவின் நீண்ட நாள் கூட்டணி கட்சியான சிவசேனா வெளியேறுவதாக அறித்தது.
இதனையடுத்து தென் இந்தியாவில் பாரதீயஜனதாவின் கூட்டணி கட்சியான தெலுங்குதேசமும் விலகலாம் என கேள்வி எழுந்தது.
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் 2019-ல் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தேர்தல் நடைபெற உள்ளநிலையில் முதல்கட்சியாக தெலுங்கு தேசம் கூட்டணியில் இருந்து வெளியேறவாய்ப்புகள் உள்ளது என செய்திகள் வெளியாகியது
சமீபத்தில் ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பேசுகையில், “நாங்கள் நட்பு தர்மத்தை பாரதீய ஜனதாவுடன் பின்பற்றிவருகிறோம், பாரதீய ஜனதா கூட்டணியை தொடரவிரும்பவில்லை என்றால் நாங்கள் தன்னிச்சையாக செல்வோம்,” என்றார். இதனையடுத்து விரிசல் அதிகமானது வெளியேதெரியவந்தது. இந்நிலையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பட்ஜெட்டில் புதியதாக பிரிக்கப்பட்ட தெலுங்கானா மற்றும் ஆந்திராவிற்கு எந்த ஒரு புதிய திட்டமும் அறிவிக்கப் படவில்லை எனக் காரணம் கூறி தெலுங்கு தேசம் கட்சியினர் தங்களுடைய கோபத்தை வெளியே தெரிவிக்க ஆரம்பித்தனர். கட்சியின் தலைமைக்கு கூட்டணியை விட்டு வெளியேறிவிடுவோம் என வலியுறுத்தினர்.
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.