கார்த்தி சிதம்பரம் ஒரு பார்வை

இந்தியாவின் நிதியமைச்சராவும் உள்துறை அமைச்ச ராகவும் பதவி வகித்த பழனியப்பன் சிதம்பரம் – நளினி சிதம்பரத்தின் மகனாக 1971 நவம்பர் மாதம் பிறந்தார் கார்த்தி. செட்டிநாட்டு ராஜா என்று அழைக்கப்பட்ட சர் அண்ணாமலை செட்டியார், ப. சிதம்பரத்தின் தாய் வழித்தாத்தா. அதாவது, கார்த்தி சிதம்பரத்தின் கொள்ளுத் தாத்தா.

சென்னையில் உள்ள தொன்போஸ்கோ பள்ளிக்கூடத்தில் பள்ளிப்படிப்பையும் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தையும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலைப் படிப்பையும் முடித்த கார்த்தி, இங்கிலாந்தில் இருந்து திரும்ப வந்தபோது தொழில்துறையில் தான் ஆர்வம் காட்டினார்.

சிறிதுகாலம் ஏ.சி. முத்தையாவின் மணலி பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார்.இதற்குப்பிறகு பல்வேறு நிறுவனங்களில் பங்குதாரராக இருந்த கார்த்தியின் மற்றொரு ஆர்வம் டென்னிஸ்.

2004ஆம் ஆண்டில், கருத்து சுதந்திரம்தொடர்பாக தமிழகத்தில் பலவிவாதங்கள் நடைபெற்றுவந்த காலகட்டத்தில் தி.மு.கவின் கனிமொழியுடன் இணைந்து அனைவரது கருத்துகளையும் வெளிப் படுத்துவதற்கான ஒரு இணைய தளமாக கருத்து.காம் என்ற இணைய தளத்தையும் நடத்தினார் கார்த்தி.

ஆனால், 2012ஆம் ஆண்டில் தன்னைப் பற்றி கருத்து ஒன்றை ட்விட்டரில் வெளியிட்ட புதுச்சேரியைச்சேர்ந்த ரவி சீனிவாசன் என்பவர் மீது காவல்துறையில் புகார் அளித்து அவரைக் கைதுசெய்ய வைத்து, சர்ச்சைக்குள்ளானார் கார்த்தி.

2015 செப்டம்பர், அக்டோபரில் நியூஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், கார்த்தி சிதம்பரம் பலநாடுகளில் பல நிறுவனங்களை நடத்திவருவதாக செய்திகளை வெளியிட்டது.

இதன்பிறகு, பல்வேறு நாளிதழ்களில் கார்த்திசிதம்பரம், ப. சிதம்பரம் ஆகியோருக்கு வெளிநாடுகளில் உள்ள முதலீடுகள், சொத்துகள் குறித்த விவரங்கள் வெளியாயின.

கடந்த 2015ம் ஆண்டின் இறுதியில் கார்த்திசிதம்பரம் தொடர்புடைய ஒருகண் மருத்துவமனை உட்பட மூன்று நிறுவனங்களில் வருமான வரித்துறையும் அமலாக்கத்துறையும் சோதனை நடத்தின.

2016ஆம் ஆண்டு மார்ச் மாதம், சிதம்பரம் மற்றும் கார்த்திசிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அண்ணா தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தையே ஸ்தம்பிக்க வைத்தனர்.

இந்த நிலையில்தான், ஐஎன்எஸ் நிறுவனம் அன்னிய முதலீடுகளைப் பெறுவதில் செய்தமுதலீடுகள் தொடர்பாக கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய அட்வான்டேஜ் குளோபல் கன்சல்டிங், செஸ் ஆகிய நிறுவனங்களிலும் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களிலும் மே மாதம் 16ம் தேதி மத்தியப் புலனாய்வுத்துறை சோதனைகளை மேற்கொண் டிருக்கிறது.

ஆனால், கார்த்திசிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பேசும் போதெல்லாம், தன்னைக் குறிவைப்பதற்காகவே தன்மகனையும் அவரது நண்பர்களையும் மத்திய அரசு துன்புறுத்தி வருவதாக ப. சிதம்பரம் கூறிவருகிறார்.

மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர்முகர்ஜி ஆகியோர் நடத்தி வந்த ‘ஐஎன்எக்ஸ் மீடியா’ என்ற தொலைக் காட்சி நிறுவனம், விதிமுறைகளை மீறி ரூ.305 கோடிக்கு தனதுபங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளது. இதற்கு அந்நிய முதலீட்டுமேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக கார்த்திசிதம்பரம் உதவி செய்ததாகவும் இதில், கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களுக்கு மொரீஷியஸ் நாட்டில் இருந்து பணம் வந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உ ...

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி! பஹல்காமில் தாக்குதல் நடந்த சூழ்நிலையில், இந்திய ராணுவ தளபதி ...

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீட ...

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு; ராணுவத்தினர் அதிரடி காஷ்மீர் எல்லைக் கோட்டுப்பகுதியில் ஒரு சில இடங்களில், ...

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவா ...

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவாத தீ.. தண்ணீரால் பதிலடி தந்தது இந்தியா பூமியில் ஒரு சொர்க்கம் இருந்தால், அது இது தான்... ...

அனைத்துகட்சி கூட்டத்தில் ஒற்ற ...

அனைத்துகட்சி கூட்டத்தில் ஒற்றுமை குரல் : பயங்கரவாதத்தை ஒடுக்க சூளுரை பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக டில்லியில் நேற்று நடந்த ...

அனைத்து கட்சி கூட்டத்தில் மத்த ...

அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ...

துயரமான நேரத்தில் துணை நிற்கிற ...

துயரமான நேரத்தில் துணை நிற்கிறோம் – இந்தியாவுக்கு பிரான்ஸ் அதிபர் உறுதி ''இந்த துயரமான நேரத்தில் பிரான்ஸ், இந்தியாவுடனும் அதன் மக்களுடனும் ...

மருத்துவ செய்திகள்

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...