ஆளுங்கட்சியின் தவறை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிடுவேன் -அண்ணாமலை

‘நான் வெளிநாடு சென்றாலும், ஆளுங்கட்சியின் தவறை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிடுவேன். சண்டை தொடரும்,’ என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு மேற்படிப்புகாக, தமிழக பா.ஜ., தலைவர் செல்ல உள்ளார். இந்நிலையில், சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக இன்று இரவு செல்கிறேன். நான் வெளிநாட்டிற்கு சென்றாலும், ஆளுங்கட்சியுடன் சண்டை இருக்கும். நான் வெளிநாட்டிற்கு சென்றாலும், என் இதயம் இங்கே தான் இருக்கும்.

அறிக்கை வரதான் செய்யும்!

வெளிநாடு சென்றாலும் அரசியல் செய்வேன். நான் வெளிநாடு சென்றாலும், ஆளுங்கட்சியின் தவறை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிடுவேன். சண்டை தொடரும். பா.ஜ.,வில் உறுப்பினர் சேர்க்கை வரும், செப்டம்பர் 1ம் தேதி முதல் துவங்கும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கிராமங்களை நோக்கி பயணம் செல்ல இருக்கிறோம்.

கிராமத்தை நோக்கி பயணம்

தேசிய அளவில் பிரதமர் மோடியும், தமிழகத்தில் எச்.ராஜாவும் முதல் உறுப்பினராக பா.ஜ.,வில் இணைவர். உறுப்பினர் சேர்க்கைக்காக இம்முறை கிராமத்தை நோக்கி பா.ஜ., பயணம் மேற்கொள்கிறது. பா.ஜ., தரும் அலைபேசி எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து, உறுப்பினராக இணையலாம். முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே மேற்கொண்ட வெளிநாடு பயணங்கள் தோல்வியில் தான் முடிந்தன.

தனித்து போட்டி

கட்சி வளர வேண்டும் என்றால் தனித்துத் தான் போட்டியிட வேண்டும். அரசியலில் மக்களின் பார்வை மாறிவிட்டது. 40 சதவீத வாக்காளர்கள் 39 வயதுக்குக் கீழ் இருக்கின்றனர்.இந்தியா மாறிவிட்டது. அ.தி.மு.க.,வில் 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் டை அடித்துக் கொண்டால், அவர்கள் இளைஞர்கள் ஆகிவிடுவார்களா? மக்களிடம் பேசுவதிலும், செயலிலும் தான் இருக்கிறது இளமை. தலையில் டை அடிப்பதில் இல்லை. இ.பி.எஸ்., மீதான விமர்சனத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன். நான் வைத்த விமர்சனம் 100 சதவீதம் சரியானது.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

மருத்துவ செய்திகள்

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...